அச்சச்சோ! ஆட்டோ கவிழ்ந்ததால் தந்தை கண்முன்னே இறந்த 4 வயது சிறுவன்...!
4 year old boy died front his father after his auto overturned
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே இருக்கும் குப்பநத்தம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முருகவேலுக்கு 2 மகன்கள். இதில் மூத்த மகன் அப்பகுதியிலுள்ள பள்ளியில் படித்து வருகிறான்.

இந்நிலையில், 2-வதாக 4 வயதான ரோகித் என்ற குப்பநத்தம் பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் யு.கே.ஜி.படித்து வந்தான்.ஆனால் இன்று காலை ரோகித்தை பள்ளியில் விடுவதற்காக அவரது தந்தை முருகவேல் தன்னுடைய ஆட்டோவில் அழைத்து சென்று கொண்டிருந்தப்போது, சாலை பள்ளத்தில் நிலை தடுமாறி ஆட்டோ கவிழ்ந்துள்ளது.
இதில் ரோகித் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.இந்தத் தகவலறிந்த விருத்தாசலம் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை கண் எதிரே ஆட்டோ கவிழ்ந்து 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இச்செய்தி அறிந்து அவர்களின் உறவினர்கள் அங்கே கூடினர்.
English Summary
4 year old boy died front his father after his auto overturned