தூத்துக்குடியில் பள்ளி மாணவனை கத்தியால் குத்திய தலைமை காவலர் கைது!
school student attacked police
தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்திருநகரி பகுதியை சேர்ந்த 41 வயதுடைய சிவனேச செல்வன், ஏரல் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக (தலைமை காவலர்) பணியாற்றி வருகிறார்.
சிவனேச செல்வன் தனது குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்ல, இரு சக்கர வாகனத்தில் ஆழ்வார்திருநகரி பேருந்து நிலையத்திற்கு சென்ற போது, அங்கு யாதவர் தெருவை சேர்ந்த 22 வயது செந்தில் ஆறுமுகம் வேகமாக இரு சக்கர வாகனத்தில் வந்தார். இதையடுத்து சிவனேச செல்வன் அவரை ஏன் இப்படி வேகமாக செல்கிறாய் என்று கேட்டார். இதனால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது செந்தில் ஆறுமுகத்தின் சித்தி மகன், பதினோராம் வகுப்பு மாணவர் 16 வயது அர்ஜூன் சம்பவத்தை பார்த்து போலீஸுடன் சேர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் சிவனேச செல்வன் தனது இரு சக்கர வாகனத்தில் இருந்த பாக்கெட் கத்தியால் அர்ஜூனை குத்தி, அவருக்கு படுகாயம் ஏற்படுத்தினார்.
அர்ஜூனை உடனடியாக மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து சிவனேச செல்வன் ஆழ்வார்திருநகரி போலீசில் புகார் செய்தார். போலீசார் அவரைப் பற்றி விசாரணை நடத்தி, வழக்குப்பதிவு செய்தும், சிவனேச செல்வனை கைது செய்தனர்.
English Summary
school student attacked police