திராவிட மாடல் அரசியல் சீர்கேட்ட சட்ட ஒழுங்கு யாரும் பேசக்கூடாது என்பதற்கான diversion tactic! - இபிஎஸ்
Dravidian model politics diversion tactic ensure that no one talks about law and order situation EPS
எதிர்க்கட்சி தலைவரும்,அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ''எடப்பாடி பழனிசாமி'' தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவில் குறிப்பிட்டதாவது,"திருப்பூர் மாவட்டத்தில் குடும்பத் தகராறை விசாரிக்கச் சென்ற எஸ்.ஐ. சண்முகவேல் படுகொலை செய்யப்பட்டதாகவும், கோவை காவல் நிலையத்தில் எஸ்.ஐ.அறையில் ஒருவர் தூக்கிட்ட நிலையில் உயிரிழப்பு எனவும் செய்திகள் தொடர்ச்சியாக வருகின்றன.

மேலும், காவல் நிலையத்தில் கூட இல்லாத சட்டம் ஒழுங்கிற்கு என்ன பதில் வைத்துள்ளார் பொம்மை முதல்வர்? விசாரிக்க செல்லும் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை என்பதையும், காவல் நிலையத்திலேயே ஒருவர் தூக்கிட்டுக் கொள்ளும் அளவிற்கு அலட்சியமாக இருந்தது என்பதையும் எப்படி எடுத்துக் கொள்வது?
இதில் மு.க.ஸ்டாலின் செய்யும் அத்தனை அரசியலும் இந்த சீர்கெட்ட சட்டம் ஒழுங்கைப் பற்றி யாரும் பேசக் கூடாது என்பதற்கான Diversion Tactic மட்டுமே! இருப்பினும், மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். அவர்களுக்கு தேவை பாதுகாப்பான தமிழகம்! மக்களைக் காக்க, தமிழகத்தை மீட்க ஒரே வழி, இந்த கையாலாகாத விடியா திமுக அரசை வீட்டுக்கு அனுப்புவதே!
இதில் மேலே தெரிவித்த வழக்குகளில் முறையான விசாரணை நடத்திடவும், குற்றவாளிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் வருகிற சட்ட மன்ற தேர்தலுக்கு நடுவே இதுபோன்ற சம்பவங்களால் அதிமுக திமுக இடையே காரசாரமான பேச்சுகள் அதிகமாகத் தொடங்கியுள்ளது.
English Summary
Dravidian model politics diversion tactic ensure that no one talks about law and order situation EPS