பெருமிதம்! இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தேடி தரும் இடத்தில் தமிழ்நாடு முதலிடம் ...! - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
TN number one place for youth find employment Chief Minister MK Stalin
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணிநியமன ஆணைகள் வழங்கினார். மேலும், நகரமைப்பு அலுவலர், உதவிப்பொறியாளர், இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட பணிகளுக்கான 2,538 இளைஞர்களுக்கு அதாவது தேர்வானோருக்கு நியமன ஆணைகளை வழங்கி முதலமைச்சர் உரையாற்றினார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது," இளைஞர்கள் தான் தமிழ் சமூகத்தின் அடித்தளமாக உள்ளனர். திராவிட மாடல் அரசு என்பது இளைஞர்களுக்கான அரசு. தமிழகத்தின் வளர்ச்சி என்பது அனைத்து துறை கூட்டு முயற்சியால் கிடைத்துள்ளது. அனைவருக்கும் நன்றி. என்னை நம்பி பொறுப்பை ஒப்படைத்த தமிழக மக்களுக்கு இந்த வளர்ச்சியை காணிக்கை ஆக்குகிறேன்.
இது சாதாரண வெற்றியல்ல, நெருக்கடி, அவதூறுகளுக்கு இடையே நாம் அடைந்த சாதனை. தேர்வாணையம், பொதுத்துறைகள் மூலமாக 1.35 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. அதில் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 89 இளைஞர்கள் மத்திய அரசில் முக்கிய பணியில் இருக்கின்றனர்.
கல்வி கொடுத்தால் மட்டும் போதாது, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தரும் நோக்கிலும் திட்டமிட்டு செயலாற்றுகிறோம். மேலும், 4 ஆண்டுகளில் 6.41 லட்சம் பேர் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு பெற்று சிறந்த வாழ்க்கையை பெற்றுள்ளனர். நகராட்சி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.
நான் முதல்வன் திட்டத்தில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கும் வேலைவாய்ப்பு வழங்கி இருக்கிறோம்.தொழிலாளர் நலத்துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் 2 லட்சத்திற்கு மேற்பட்டோருக்கு விளையாட்டு துறை மூலம் 84 பேருக்கு வேலை கிடைத்துள்ளது. அமைதியான சூழல், சிறப்பான சட்டம் ஒழுங்கு, திறமையான இளைஞர்கள் காரணமாக நாட்டில் தமிழகம் முதலிடத்தில் பிடித்து பெருமகிழ்ச்சி பெற்று வருகிறது" என்று தெரிவித்தார்.
மேலும்,மத்திய அரசின் கடும் வஞ்சகத்திற்கு மத்தியில் இவ்வாறு இளைஞர்களுக்காக யோசிக்கிறார் என்று திமுக நிர்வாகிகள் முதலமைச்சரை பாராட்டி வருகின்றனர்.
English Summary
TN number one place for youth find employment Chief Minister MK Stalin