இனி பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இருக்காது...! ஹோர்முஸ் நீரிணையை கடக்கத் தொடங்கிய கப்பல்கள்...! - நிம்மதிப் பெருமூச்சில் உலக நாடுகள்...! - Seithipunal
Seithipunal


உலகின் எரிசக்தி சந்தையை உலுக்கிய அமெரிக்கா - ஈரான் மோதல் புதிய திருப்பத்தை எட்டியுள்ளது. பல மாதங்களாக நீடித்த பதற்றம், தாக்குதல்கள் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இருநாடுகளும் அமைதி ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக அறிவித்துள்ளன.

மத்திய கிழக்கில் நிலவிய பதற்றமான சூழ்நிலை காரணமாக, முக்கிய அரசியல் தலைவர்கள், பாதுகாப்புப் படையினர் மற்றும் அப்பாவி பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின. இந்த மோதல் உலகளாவிய வர்த்தகம் மற்றும் எரிசக்தி விநியோகத்தையும் கடுமையாக பாதித்தது.

அமெரிக்காவுடனான பதற்றம் உச்சத்தை எட்டியதைத் தொடர்ந்து, உலகின் முக்கிய கடல்வழிப் பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. இதன் விளைவாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வேகமாக உயர்ந்தது. மறுபுறம், ஈரானின் துறைமுகங்களை அமெரிக்க கடற்படை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததால், சரக்கு மற்றும் எண்ணெய் கப்பல்களின் போக்குவரத்தும் பெரிதும் பாதிக்கப்பட்டது.

இந்த சூழலில் பல நாடுகளின் தூதரக முயற்சிகள் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே முதலில் தற்காலிக போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் நடைபெற்ற தொடர் பேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்து, இருநாடுகளும் அமைதி ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக அறிவித்துள்ளன.

இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாக, உலக நாடுகளின் அனைத்து கப்பல்களுக்கும் ஹார்முஸ் நீரிணை கட்டணமின்றி திறக்கப்படும் என ஈரான் அறிவித்துள்ளது. அதேநேரத்தில், ஈரானின் கடற்பகுதிகளை கண்காணித்து வந்த அமெரிக்க கடற்படை தனது முற்றுகை நடவடிக்கைகளை திரும்பப் பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஈரானுடனான ஒப்பந்தம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாகவும், ஹார்முஸ் நீரிணை மீண்டும் உலக வர்த்தகத்திற்கு முழுமையாக திறக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், உலக நாடுகளின் கப்பல்கள் தடையின்றி பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அமெரிக்காவுடனான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதை ஈரானின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் காசெம் கரிபாபாடி உறுதிப்படுத்தியுள்ளார். இந்த ஒப்பந்தம் இருநாடுகளுக்கும் இடையிலான மோதலுக்கு உடனடி முடிவை ஏற்படுத்தியுள்ளதாகவும், நிரந்தர உடன்பாட்டை எட்டுவதற்காக அடுத்த இரண்டு மாதங்களில் கூடுதல் பேச்சுவார்த்தைகள் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மொத்தம் 14 அம்சங்களை உள்ளடக்கிய இந்த அமைதி ஒப்பந்தத்தில், 30 நாட்களுக்குள் ஹார்முஸ் நீரிணையை முழுமையாக திறப்பது, ஈரானின் எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் மீதான தடைகளை தளர்த்துவது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் வரும் வெள்ளிக்கிழமை சுவிட்சர்லாந்தில் அதிகாரப்பூர்வமாக கையெழுத்தாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த 60 நாட்களுக்குள் அனைத்து நிபந்தனைகளையும் இருதரப்பும் முழுமையாக அமல்படுத்த வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அமைதி ஒப்பந்தத்தின் மற்றொரு முக்கிய அம்சமாக, ஈரானின் முடக்கப்பட்ட சொத்துக்களில் முதற்கட்டமாக 12 பில்லியன் அமெரிக்க டாலர்களை விடுவிக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளதாக ஈரானிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், பேச்சுவார்த்தை காலகட்டத்திற்குள் மொத்தம் 24 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துகளை விடுவிக்க இருதரப்பும் இணக்கம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.இந்த முன்னேற்றங்களின் தாக்கம் உலக எண்ணெய் சந்தையிலும் எதிரொலித்துள்ளது. அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்ட செய்தி வெளியாகியதையடுத்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக சரிந்துள்ளது.

இதனால் உலக நாடுகளில் எரிபொருள் விலை அழுத்தம் குறையும் என பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.மேலும், ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால், அப்பகுதியில் காத்திருந்த எண்ணெய் மற்றும் எரிவாயு கப்பல்கள் தங்களது பயணத்தை மீண்டும் தொடங்கியுள்ளன.

இதன் மூலம் உலக நாடுகளில் நிலவிய எரிபொருள் தட்டுப்பாடு விரைவில் நீங்கும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.உலக பொருளாதாரத்திற்கும் எரிசக்தி சந்தைக்கும் புதிய நம்பிக்கையை அளித்துள்ள இந்த அமைதி ஒப்பந்தம், மத்திய கிழக்கில் நீண்டகால நிலைத்தன்மைக்கு வழிவகுக்குமா என்ற எதிர்பார்ப்பு சர்வதேச அரங்கில் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

There will be no more shortage petrol and diesel Ships started crossing Strait Hormuz Countries world breathe sigh relief


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->