இந்துக்களின் வாய்ப்பு பறிபோகிறதா...? முஸ்லீம் இடஒதுக்கீட்டை 5% ஆக உயர்த்தும் கோரிக்கைக்கு நயினார் நாகேந்திரன் கடும் எதிர்ப்பு.
Are Hindus losing their opportunity Nayinar Nagendran strongly opposes demand increase Muslim reservation 5percentage
தமிழகத்தில் முஸ்லீம்களுக்கான இடஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில், அதுகுறித்து அரசு தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது,"முஸ்லீம்களுக்கான தற்போதைய 3.5 சதவீத இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஷாஜகான் முன்வைத்துள்ள கோரிக்கை அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில், அந்த கோரிக்கையை பரிசீலிப்பதற்கு முன்பாக தமிழக அரசு தனது தெளிவான நிலைப்பாட்டை மக்களிடம் வெளிப்படுத்த வேண்டும்.ஏற்கனவே நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டு அமைப்பின் காரணமாக, பிற்படுத்தப்பட்ட இந்து சமூகத்தைச் சேர்ந்த சில தரப்பினர் தங்களுக்கான வாய்ப்புகள் குறைந்து வருவதாகக் கருதும் சூழல் நிலவுகிறது.
இத்தகைய நிலையில், முஸ்லீம்களுக்கான ஒதுக்கீட்டை மேலும் விரிவுபடுத்துவது, பிற சமூகங்களின் பிரதிநிதித்துவத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது.இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படை நோக்கம் சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கியோருக்கு உரிய வாய்ப்புகளை வழங்குவதாகும்.
அதனை மீறி மத அடிப்படையிலான ஒதுக்கீடுகளை விரிவுபடுத்துவது எந்த வகையில் நியாயப்படுத்தப்படுகிறது என்பது குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.மேலும், சமூக ஒற்றுமையையும் சமநிலையையும் பாதிக்கக்கூடிய முடிவுகள் எடுக்கப்படக் கூடாது. குறிப்பிட்ட தரப்பினரின் அரசியல் கோரிக்கைகளுக்கு இணங்க செயல்படுவதற்குப் பதிலாக, அனைத்து சமூகங்களின் நலன்களையும் கருத்தில் கொண்டு அரசு முடிவெடுக்க வேண்டும்.
முஸ்லீம் இடஒதுக்கீட்டை உயர்த்தும் கோரிக்கையை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதே தவறான அணுகுமுறையாகும் என்பதை அரசு உணர வேண்டும். சமூகநீதி என்ற பெயரில் புதிய சர்ச்சைகளுக்கு வழிவகுக்கும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படக்கூடாது.
எனவே, இந்த விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு என்ன என்பதை வெளிப்படையாக அறிவித்து, பொதுமக்களிடையே எழுந்துள்ள சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Are Hindus losing their opportunity Nayinar Nagendran strongly opposes demand increase Muslim reservation 5percentage