பெங்களூருவில் பரபரப்பு...! 'லிவிங்-இன்' உறவில் வெடித்த பொறாமைத் தீ...! - திருமணத்திற்கு மறுத்த இளம்பெண் ரத்த வெள்ளத்தில் படுகொலை...! - Seithipunal
Seithipunal


பெங்களூருவில் ஒன்றாக வசித்து வந்த இரு இளம்பெண்களுக்கிடையே ஏற்பட்ட உறவு முறிவு, கொடூரமான கொலையில் முடிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரின் பெல்லந்தூர் பகுதியில் உள்ள தொட்டகன்னஹள்ளி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர்கள் பூர்வா லேஷ்பா (24) மற்றும் கங்கியா சூபா (22).

சிக்கிம் மற்றும் டார்ஜிலிங் பகுதிகளைச் சேர்ந்த இவர்கள் இருவரும் ஓராண்டுக்கு முன்பு சிக்கிமில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றியபோது அறிமுகமாகியுள்ளனர்.நாளடைவில் நட்பாக தொடங்கிய பழக்கம் காதலாக மாறிய நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வேலை வாய்ப்புக்காக இருவரும் பெங்களூருவுக்கு குடிபெயர்ந்தனர்.

அங்கு பூர்வா லேஷ்பா ஓட்டல் ஒன்றிலும், கங்கியா பெண்களுக்கான அழகு நிலையத்திலும் பணியாற்றி வந்தனர். பின்னர் ஒரே வீட்டில் தங்கி வாழ்ந்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு அதிகாலை நேரத்தில் வீட்டிற்கு திரும்பிய கங்கியா மற்றும் பூர்வா லேஷ்பா இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த தகராறு முற்றிய நிலையில், ஆத்திரத்தின் உச்சத்திற்குச் சென்ற பூர்வா லேஷ்பா, சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து கங்கியாவை தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.கழுத்துப் பகுதியில் பலத்த காயம் அடைந்த கங்கியா, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவத்திற்குப் பிறகு பூர்வா லேஷ்பா அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

இந்த தகவலறிந்து விரைந்து வந்த காவலர்கள், உயிரிழந்த இளம்பெண்ணின் உடலை மீட்டு விசாரணையை தொடங்கினர். மேலும் உயரதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.இந்த விசாரணையில், கடந்த ஓராண்டாக இருவரும் காதல் உறவில் இருந்ததும், அண்மைக் காலமாக ஒன்றாக வசித்து வந்ததும் தெரியவந்துள்ளது.

இதற்கிடையே, கங்கியா மற்றொரு இளைஞருடன் நெருக்கமாக பழகி வந்ததாகவும், இதுகுறித்து அறிந்த பூர்வா லேஷ்பா அவரை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆனால் திருமணம் தொடர்பாக கங்கியா சம்மதம் தெரிவிக்காததால் இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த பிரச்சினை உச்சக்கட்டத்தை எட்டிய நிலையில் ஏற்பட்ட தகராறே கொலையாக மாறியிருக்கலாம் என்ற கோணத்தில் காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர்.இதையடுத்து, தலைமறைவாக இருந்த பூர்வா லேஷ்பாவை காவலர்கள் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

உறவு முறிவும் பொறாமையும் இணைந்து நிகழ்ந்ததாக கருதப்படும் இந்த கொலைச் சம்பவம், பெங்களூரு நகரில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bengaluru state turmoil fire jealousy erupted living in relationship young woman who refused marriage murdered bloody massacre


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->