திருட்டு வழக்கு..2 இந்தியருக்கு 5 ஆண்டுகள் சிறை - 12 சவுக்கடி தண்டனை!
Theft case 5 years imprisonment for 2 Indians 12 stroke punishment
சிங்கப்பூரில் பாலியல் தொழிலாளிகளிடம் திருட்டு வழக்கு தொடர்பாக 2 இந்திய சுற்றுலா பயணிகளுக்கு 5 ஆண்டுகள் சிறை விதித்து , 12 சவுக்கடி தண்டனை வழங்கி சிங்கப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவை சேர்ந்த ஆரோக்கியசாமி டைசன் மற்றும் ராஜேந்திரன் மயிலரசன் ஆகிய இருவரும், விடுமுறையை கழிப்பதற்காக கடந்த ஏப்ரல் 24-ந்தேதி சிங்கப்பூர் சென்றுள்ளனர்.
அப்போது அங்குள்ள லிட்டில் இந்தியா பகுதிக்கு சென்ற அவர்களிடம் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் “பாலியல் தேவைகளுக்காக பெண்கள் வேண்டுமா?” என்று கேட்டுள்ளார். மேலும் அவரிடம் 2 இளம்பெண்களின் தொலைபேசி எண்களை அந்த நபர் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார்.
அப்போது இரண்டு பெண்ணை போனில் அழைத்து, ஓட்டல் அறைக்கு கூட்டிச் சென்று பணம், நகைகள், வங்கி அட்டைகளை கொள்ளையடித்துவிட்டுச் சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் போலீசில் புகார் அளித்த நிலையில், போலீசார் விசாரணை நடத்தி ஆரோக்கியசாமி மற்றும் ராஜேந்திரனை அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது, பாலியல் தொழிலாளிகளை தாக்கி பணம் பறித்ததை இருவரும் ஒப்புக் கொண்டனர்.
இதில் ஆரோக்கியசாமி, “எனது தந்தை கடந்த ஆண்டு இறந்துவிட்டார். எனக்கு 3 சகோதரிகள் உள்ளனர். அதனால் தான் திருட்டில் ஈடுபட்டோம்” என்று கூறினார். அதே போல் ராஜேந்திரன், “எனது மனைவியும், குழந்தையும் இந்தியாவில் தனியாக உள்ளனர். நாங்கள் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள்” என்று மன்றாடினார்.
இருப்பினும் அவர்களது கோரிக்கைகளை ஏற்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. சிங்கப்பூரில் கொள்ளை சம்பவத்தின்போது காயம் ஏற்படுத்தும் குற்றவாளிகளுக்கு 5 முதல் 20 வருடங்கள் வரை தண்டனை வழங்க சட்டத்தில் இடம் உள்ளது. இதன்படி ஆரோக்கியசாமி மற்றும் ராஜேந்திரனுக்கு தலா 5 ஆண்டுகள் சிறையும், 12 சவுக்கடிகளும் தண்டனையாக விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
English Summary
Theft case 5 years imprisonment for 2 Indians 12 stroke punishment