முதலாவது  டெஸ்ட்..இந்திய சூழலில் விழுந்த வெஸ்ட் இண்டீஸ் அணி!  - Seithipunal
Seithipunal


வெஸ்ட் இண்டீஸ் அணி தனது 2வது இன்னிங்சில் 45.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 146 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

 வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது . அதன்படி இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொடங்கியது .

இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது  அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் 44.1 ஓவர்களில் 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. இந்திய அணி வீரர்களின் அபார பந்து வீச்சில் சரண்டர் ஆனது.இந்திய தரப்பில் சிராஜ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளையும், பும்ரா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா நேற்று  2ம் நாள் முடிவில் 128 ஓவரில் 5 விக்கெட்டை 448 ரன்கள் குவித்திருந்தது.  இந்நிலையில், இன்று 3ம் நாள் ஆட்டம் நடந்தது.

இன்றைய ஆட்டம் தொடங்கும் முன்னரே இந்திய அணி தனது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. இதன் காரணமாக 286 ரன்கள் பின்னிலையுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது 2வது இன்னிங்சை தொடங்கியது. 
இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்து அடுத்து விக்கெட்டுகளை இழந்து இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது 2வது இன்னிங்சில் 45.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து கடைசியில் 146 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இன்னிங்ஸ் மற்றும் 140 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டும், சிராஜ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என இந்தியா முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி வரும் 10ம் தேதி தொடங்குகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

First Test The West Indies team struggling in the Indian conditions


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->