பரிகாரம் செய்வதாக ரூ.5 லட்சம் மோசடி - பெண்களை வட்டமடித்த சாமியார் கைது!
Rs 5 lakh scam for performing rituals Swami who exploited women arrested
பரிகாரம் செய்வதாக கூறி இளம் பெண்ணை ஏமாற்றி ரூ.5 லட்சம் மோசடி செய்த சாமியாரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தை சேர்ந்த பிரவீனா என்ற பெண்ணின் தாய்க்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து சக்திவேல் என்ற சாமியாரிடம் அந்த பெண் முறையிட்டுள்ளார். அப்போது அந்த சாமியார் உடல்நல பாதிப்பை சரிசெய்ய சில பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்றும், அதற்கு 10 லட்சம் ரூபாய் செலவாகும் எனவும் கூறியிருக்கிறார்.
இதனை நம்பிய பிரவினா, அந்த சாமியாரிடம் முதற்கட்டமாக 5 லட்சம் ரூபாய் முன்பணம் கொடுத்து பரிகாரங்களை செய்யுமாறு கூறியிருக்கிறார். அதன்படி பரிகாரம் செய்தும் எதிர்பார்த்தபடி தனது தாய்க்கு உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் ஏமாற்றமடைந்த பிரவீனா, சாமியார் சக்திவேலிடம் சென்று தனது பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார்.
ஆனால் பணத்தை திருப்பி தர முடியாது என்று கூறி சக்திவேல் அந்த பெண்ணை மிரட்டியதால் சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாமியார் சக்திவேலை அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Rs 5 lakh scam for performing rituals Swami who exploited women arrested