முதல் பெண் சபாநாயகர் திருமதி.சரளாதேவி அவர்கள் நினைவு தினம்!.
First woman Speaker Mrs Saraladevis memorial day
இந்திய சுதந்திர போராட்ட வீராங்கனை, ஒடிசா மாநிலத்தின் முதல் பெண் சபாநாயகர் திருமதி.சரளாதேவி அவர்கள் நினைவு தினம்!.
சரளாதேவி (Sarala Devi, ஆகஸ்ட் 9, 1904 – அக்டோபர் 4, 1986) இந்திய சுதந்திர இயக்க ஆர்வலர், பெண்ணிய சமூக ஆர்வலர், எழுத்தாளர். 1921ஆம் ஆண்டில் ஒத்துழையாமை இயக்கம் ஒன்றில் சேர்ந்த முதல் ஒடிசா பெண்மணி ஆவார். சுதந்திர இந்தியாவில் ஒடிசா சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்.
ஒடிசா சட்டமன்றத்தி்ன் முதலாவது பெண் பேச்சாளராகவும் கட்டாக்கின் கூட்டுறவு வங்கியின் முதல் பெண் இயக்குநராகவும், உப்கால் பல்கலைக்கழகத்தின் முதல் பெண் செனட் உறுப்பினராகவும், இந்திய தேசிய காங்கிரசின் முதல் ஒடிசா பெண் பிரதிநிதியுமாகவும் இருந்தார்.

சரளாதேவி 1904ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 அன்று பாலிக்குடாவுக்கு அருகே நாிலோ கிராமத்தில் பிறந்தார். அப்போது வங்காள மாகாணத்தின் ஒரிசா பிாிவு (இப்போது ஒடிசாவில் உள்ள ஜாக்சிங்ஷ்பூர் மாவட்டத்தில்) சமீந்தார் குடும்பத்தைச் சேர்ந்தவர். 1917ல் பகவதி மகாபத்ராவை மணந்தாா்.
1918 ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார். மகாத்மா காந்தியின் ஒரிசா முதல் பயணத்தைத் தொடா்ந்து 1921ல் காங்கிரஸ் கட்சியில் சோ்ந்தார். 1943 முதல் 1946 வரை கட்டாக்கில் உள்ள உட்கால் சாஉறிதி சமாஜின் செயலாளராக பணியாற்றினார். சரளாதேவி 30 புத்தகங்களையும் 300 கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
English Summary
First woman Speaker Mrs Saraladevis memorial day