பழித்தீர்க்க நினைக்கும் ஈரான்; அமெரிக்காவுடன் கைகோர்க்கும் அமீரகம்; அடுத்து நடக்க போவது என்ன..?
The UAE Joins Hands with the US Against Iran
அமெரிக்கா+இஸ்ரேலின் கூட்டு தாக்குதலுக்கு பதிலாக ஈரான் மத்திய கிழக்கில் அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்துகிறது. 01 மாதத்தை தொட்டுள்ள இந்த போர் தொட்டுள்ளது.
குறித்த போரின் காரணமாக உலகெங்கும் நிலவும் எண்ணெய்த் தட்டுப்பாட்டைச் சரிசெய்ய ஈரான் முடக்கியிருக்கும் ஹார்முஸ் நீரிணையில் தரைவழித் தாக்குதலை நடத்த அமெரிக்கா தயாராகி வருகிறது. இந்தப் போரில் ஐக்கிய அரபு அமீரகமும் சேரும் என்ற ஊகங்கள் வலுப்பெற்றுள்ளன.
இந்த போரில் 11க்கும் மேற்பட்ட நாடுகள் ஈரானின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. ஆனால், இஸ்ரேலைத் தவிர, ஐக்கிய அரபு அமீரகத்தைவிடக் வேறு எந்த நாடுகளும் கடுமையான பாதிக்கப்பைச் சந்திக்கவில்லை. ஈரானின் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களில் 65% ஐக்கிய அரபு அமீரகத்தை நோக்கியே குறிவைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக ஈரானிலிருந்து சுமார் 1,000 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது, ஈரான் 2,200-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளையும் ஆளில்லா விமானங்களையும் ஏவியுள்ளது. இவ்வாறு ஈரானின் தொடர் தாக்குதலால், அங்கு அமெரிக்கத் தளங்கள் மட்டுமின்றி, துறைமுகங்கள், விமான நிலையங்கள், பொருளாதார மையங்கள், எண்ணெய்க் கிடங்குகள் என அனைத்துக்கும் குறிவைக்கப்பட்டதால் பலத்த சேதம் அடைந்துள்ளது.
இந்த தாக்குதலில், ஐக்கிய அரபு அமீரகத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகள் 95%-க்கும் மேற்பட்ட தாக்குதல்களை இடைமறித்துள்ளன. அதாவது, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் மீது குறிவைக்கப்படுவதற்குக் காரணம், அந்நாட்டில் உள்ள அல் தஃப்ரா விமானப்படைத் தளம்தான் என்று கூறப்படுகிறது.
அதாவது அந்த தளம், முக்கிய அமெரிக்க ராணுவ வசதிகளைக் கொண்டிருக்கிறது. இதனால், அமெரிக்காவை நேரடியாகத் தாக்க முடியாத நிலையில், அமெரிக்க நலன்களைச் சார்ந்திருக்கும் நாடுகளையே ஈரான் குறிவைக்கிறது. அந்த வகையிலேயே ஐக்கிய அரபு அமீரகம் ஈரானுக்கு இலக்காகி வருகிறது.
ஐக்கிய அரபு அமீரகம், ஓர் அமெரிக்கத் தளத்தை மட்டும் அல்லாமல், அமெரிக்காவின் முக்கிய பாதுகாப்புப் பங்காளியாகவும் விளங்குகிறது. அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய இரு நாடுகளுக்கிடையே கூட்டுப் பயிற்சிகள், ஆயுதங்கள் உள்ளிட்டவை தொடர்பாக கடந்த 2024-ஆம் ஆண்டே ஒப்பந்தமானது.
இவ்வாறு ஐக்கிய அரபு அமீரகத்தைத் தாக்குவதன் மூலம், அமெரிக்காவின் பிராந்திய நட்பு நாடுகளுக்கான செலவுகளை அதிகரிக்கக் கூடும். இது தவிர, தம் நாட்டுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளுக்கான ஆதரவும் சிதையக்கூடும் என ஈரான் நம்புகிறது. இதையடுத்தே ஐக்கிய அரபு அமீரகத்தை ஈரான் தொடர்ந்து குறிவைத்து வருகிறது.
அத்துடன், அமீரகம், தன்னை மேற்கத்திய நாடுகளுக்கும் வளைகுடா நாடுகளுக்கும் இடையே ஒரு பாலமாக நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது. இதன்மூலம் அமீரகம் நிதி, சுற்றுலா, தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகத்தில் ஓர் உலகளாவிய மையமாகத் திகழ்ந்து வருகிற நிலையில், இதன் வளர்ச்சிக்கு அமெரிக்கா ஆதரவுக் கரம் நீட்டி வருகிறது.
இதை ஈரான் நீண்டகாலமாகவே எதிர்த்து வருகிறன்ற நிலையில், . அதற்கு பழிவாங்கும் விதமாகவே அமீரகம் மீது தாக்குதல் நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. அதற்குக் காரணம், ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகில் அமைந்துள்ள முக்கியத்துவம் வாய்ந்த அபு மூசா மற்றும் துன்ப் தீவுகள்தான்.
இந்த தீவுகள் ஐக்கிய அரபு அமீரகம் உருவாவதற்கு முன்பு, 1971-இல் ஈரானால் ஆக்கிரமிக்கப்பட்டன. அத்தீவுகள் இன்றும் ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், இருநாட்டு உறவில் நீண்டகால பிரச்சினையாக இருந்து வருகிறது. தற்போது, ஐக்கிய அரபு அமீரகம் இந்த மோதலைப் பயன்படுத்தி தீவுகளை ஆக்கிரமித்துவிடுமோ என்று ஈரான் எச்சரிக்கையாக உள்ளது.
இன்னொரு புறம், 2020 ஆம் ஆண்டின் ஆபிரகாம் உடன்படிக்கைகளுக்குப் பிறகு, ஐக்கிய அரபு அமீரகம் இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியாகத் திகழ்கிறது. இந்த நிலையில்தான், ஐக்கிய அரபு அமீரகத்தின் பொறுமை தற்போது குறைந்து வருவதாகவும், ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களில் தானும் இணையக்கூடும் என வால் ஸ்ட்ரீட் ஜர்னல் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
ஈரான் போர் காரணமாக உலகெங்கும் நிலவும் எண்ணெய்த் தட்டுப்பாட்டைச் சரிசெய்ய ஈரான் முடக்கியிருக்கும் ஹார்முஸ் நீரிணையில் தரைவழித் தாக்குதலை நடத்த அமெரிக்கா தயாராகி வருகிறது. இந்தப் போரில் ஐக்கிய அரபு அமீரகமும் சேரும் என்ற ஊகங்கள் வலுப்பெற்றுள்ளன. ஈரானின் ரகசியத்தை ஐக்கிய அரபு அமீரகம் தெரிந்து வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மறுபுறம், ரஷ்யாவிடமிருந்து கிடைத்த தகவல்களின் ஆதரவுடன், ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து ஒரு தரைவழித் தாக்குதல் தொடங்கப்படலாம் என்ற உளவுத் தகவல் தமக்கும் கிடைத்திருப்பதாக ஈரானும் நம்புகிறது. இதனால், எதிர்காலத்தில் போர் எத்தகைய சூழலை உருவாக்கும் என வல்லுநர்கள் அச்சப்படுகின்றனர்.
English Summary
The UAE Joins Hands with the US Against Iran