அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸின் வீடு மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர் கைது..! - Seithipunal
Seithipunal


அமெரிக்க துணை அதிபராக ஜே.டி. வான்ஸின் ஓஹியோ வீடு மீது மர்ம நபர் ஒருவர் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளார். ஆனால், அந்த சம்பவம் நடந்த போது வான்ஸ் குடும்பத்தினர் வீட்டில் இல்லை. இந்த தாக்குதல் சம்பவம் ஜே.டி. வான்ஸ் அல்லது அவரது குடும்பத்தினருக்கு எதிரான இலக்கு தாக்குதலா..? என்பது குறித்து புலனாய்வு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், துணை அதிபர் வீட்டின் வெளிப்புறத்தில் ஜன்னல்களை சேதப்படுத்திய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து வான்ஸோ அல்லது வெள்ளை மாளிகையோ இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தாக்குதல் சம்பவம் நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு தான் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் புறப்பட்டு சென்றதாக அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The suspect who attacked the home of US Vice President JD Vance has been arrested


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->