தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்!...மீன்பிடி வலைகளை வெட்டி வீசி 17 மீனவர்கள் கைது! - Seithipunal
Seithipunal


இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி, தமிழக மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்து வருவது வாடிக்கையாகி வரும்  நிலையில், அண்மையில் இது தொடர்ந்து மேலும் மேலும் அதிகரித்து வருகிறது.

இலங்கையின் இந்த நடவடிக்கைக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்தும், இதை தடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

கடந்த 21-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 37 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த கன்னியாகுமரியை சேர்ந்த 5 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் விசைப்படகுடன் கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில், நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 17 மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த தமிழக மீனவர்கள் 17 பேரையும் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

மேலும் அவர்களை  காங்கேசன் துறை கடற்படை முகாமில் வைத்து இலங்கை கடற்படையினர் விசாரித்து வருவதாகவும், கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்த மீனவர்களின் வலைகளை இலங்கை கடற்படை வெட்டி வீசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The sri lankan navy atrocities continue 17 fishermen arrested for cutting fishing nets and throwing them away


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->