90 ரூபாய்க்கு வாங்கிய வீடு... இப்போ 4 கோடி ரூபாயா.? வைரலான பெண்ணின் சாமர்த்தியம்.! - Seithipunal
Seithipunal


சொந்த வீடு என்பது நம் அனைவரின் கனவாக இருக்கும். இன்று நாம் சம்பாதிக்கும் பணத்தில் பெரும் பகுதி  செலவு செய்து எப்படியாவது ஒரு வீடு வாங்கி கட்டிவிட வேண்டும் என்று எண்ணுகிறோம். இதைப் போல அமெரிக்காவைச் சார்ந்த இத்தாலிய பெண் ஒருவர் ஒரு யூரோ அதாவது இந்திய மதிப்பிற்கு 80 ரூபாய்க்கு வீடு வாங்கி அதை இன்று பல கோடி ரூபாய் மதிப்புள்ள வீடாக மாற்றி இருக்கிறார்.

இத்தாலி நாட்டைச் சார்ந்தவர் மெரெடித் டப்போன். இவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார். இந்தப் பெண்மணிதான் ஒரு யூரோவிற்கு வீட்டை வாங்கி  னஅதை இன்று பல கோடி ரூபாய் மதிப்புள்ள வீடாக மாற்றி இருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்னர் இத்தாலி நாட்டின் சிசிலி பகுதியில் 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வீடுகளை ஒரு யூரோ ஒரு வீடு என்ற திட்டத்தின் கீழ் இத்தாலி அரசு ஏலம் விட்டது.

இந்த ஏலத்தின் மூலம் எந்த வசதியும் இல்லாத 750 சதுர அடி கொண்ட வீட்டை ஒரு யூரோவிற்கு வாங்கினார் மெரெடித். அதன் அருகேவுள்ள வீட்டையும் 27 லட்ச ரூபாய்க்கு வாங்கி 3000 சதுர அடி கொண்ட இடமாக மாற்றினார். இதனைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் முயற்சி செய்து ரூ.2.35 கோடி செலவில் அந்த வீட்டை சீரமைத்தார்.

புதிதாக புனரமைக்கப்பட்ட வீட்டில் பெரிய படுக்கையறையுடன் கூடிய நான்கு குளியலறைகள் சமையலறை டைனிங் அறை என தற்போதைய வீட்டின் மதிப்பு ரூ.4.10 கோடியாக உள்ளது. ஒரு யூரோவிற்கு 750 சதுர அடி இடத்தை வாங்கி  தனை புத்திசாலித்தனத்தோடு புனரமைத்த அந்தப் பெண்ணின் புத்தி கூர்மையை அனைத்து மக்களும் பாராட்டி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The skill of the woman who converted the house bought for 90 rupees into a house worth 4 crore rupees


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->