100 வயதை தாண்டியவர்களின் எண்ணிக்கை 1 லட்சமாக அதிகரிப்பு..எந்த நாட்டில் தெரியுமா?
The number of people over 100 years old has increased to 100000 Do you know in which country
உலகிலேயே அதிக வயதானவர்கள் வாழும் நாடு ஜப்பான். அந்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15ஆம் தேதி முதியோர் தினம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, முதியோர்களின் எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டு, அவர்களுக்கு வாழ்த்து மற்றும் பரிசுகள் வழங்கப்படும் மரபும் உள்ளது.
1963ஆம் ஆண்டு முதன்முறையாக இந்த கணக்கெடுப்பு தொடங்கியபோது, 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை வெறும் 153 ஆக இருந்தது. ஆனால், காலப்போக்கில் இந்த எண்ணிக்கை பெருகி, இவ்வாண்டு சுமார் ஒரு லட்சம் பேரை எட்டியுள்ளது. இதில் 88 சதவீதம் பெண்கள் ஆவர் என்பது சிறப்பான தகவல்.
மேலும், இந்த ஆண்டிலேயே 52,310 பேர் 100 வயதை தாண்டியுள்ளனர். இவர்களுக்கு ஜப்பான் பிரதமர் கையால் வாழ்த்து மடல், பரிசுத் தொகை மற்றும் வெள்ளிக் கோப்பை முதியோர் தினத்தன்று வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் டகாமரோ புகோகா தெரிவித்ததாவது:“உலகின் பல பகுதிகளில் உப்பு மற்றும் சர்க்கரை அதிகம் கலந்த உணவுகள் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. ஆனால் ஜப்பானியர்கள் மீன், காய்கறி போன்ற ஆரோக்கியமான உணவுகளை அதிகம் உட்கொள்கின்றனர். அதோடு நடைபயிற்சியும் வாழ்க்கை முறையில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால்தான் ஜப்பான் முதியவர்கள் உலகின் பிற நாடுகளை விட அதிக சுறுசுறுப்புடன் வாழ்கின்றனர்” என்றார். இதனால், நீண்ட ஆயுளில் ஜப்பான் உலகிற்கு இன்னும் ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறது.
English Summary
The number of people over 100 years old has increased to 100000 Do you know in which country