116 ஆண்டு கால வரலாற்றில் இதுவே முதல் முறை: பிரிட்டன் 'எம்.ஐ.6'-இன் தலைவராக முதல் பெண் தலைவர் நியமனம்..! - Seithipunal
Seithipunal


ஐரோப்பிய நாடான பிரிட்டனின் உளவு அமைப்பான 'எம்.ஐ.6'-இன்  தலைவராக, பெண் ஒருவர் முதல் முறையாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த எம்.ஐ.-6 உளவு அமைப்பின் தலைவர் பதவியை, 'சி' என்று குறிப்பிடுவர். இந்தப் பதவியில் உள்ளவர் பெயர் மட்டுமே வெளியுலகுக்கு தெரியும். ஆனால், அந்த அமைப்பின் மற்ற பதவிகளில் உள்ளவர்கள் பெயர்கள் மிகவும் ரகசியமாக வைக்கப்படுகிறது.

குறித்த அமைப்பின் தற்போதைய தலைவராக உள்ள சர் ரிச்சர்ட் மூரே, விரைவில் ஓய்வு பெற உள்ள நிலையில், உளவு அமைப்பின் தொழில்நுட்ப பிரிவு தலைவராக உள்ள 47 வயதான பிளேசி மெட்ரவெலி புதிய தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

 'எம்.ஐ.,6'-உளவு அமைப்பின் 116 ஆண்டு கால வரலாற்றில், பெண் ஒருவர் தலைவராக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இவர் இதற்கு முன்னர் உள்நாட்டு பாதுகாப்பை கவனிக்கும் எம்.ஐ.- 5 உளவு அமைப்பின் தலைவர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார். கடந்த 1999 முதல், பிளேசி மெட்ரவெலி உளவு அமைப்பில் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The first female head has been appointed as the head of Britain MI6


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->