திருமண ஆசை காட்டி பிரபல சின்னத்திரை நடிகை மோசடி..  ஓட்டல் அதிபர் பரபரப்பு புகார்! - Seithipunal
Seithipunal


திருமண ஆசை காட்டி நகை, பணம் வாங்கி மோசடி செய்ததாக டி.வி. நடிகை மீது ஓட்டல் அதிபர் புகார் அளித்துள்ள சம்பவம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை போரூர் அடுத்த கொளப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஓட்டல் அதிபரான ராஜ் கண்ணன் பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ள சின்னத்திரை நடிகை ரிகானா பேகம், நண்பர் மூலம் எனக்கு அறிமுகமாகி தன்னுடன் நடப்பாகி பழகி வந்தார். அப்போது நடிகை ரிகானா பேகம்,தனக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருப்பதாகவும், கணவரை விவாகரத்து செய்துவிட்டதாகவும் கூறினார். ரிகானா பேகத்தை திருமணம் செய்து கொள்ளுமாறு அவரது தாய் கூறிய நிலையில் நாங்கள் இருவரும் காதலித்து வந்தோம்.

அதன்பிறகு  நாங்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தோம். இதனால் அவர் கேட்ட நகை உள்ளிட்ட பொருட்களை எல்லாம் வாங்கி கொடுத்து சுமார் ரூ.20 லட்சம் வரை அவருக்காக செலவு செய்தேன்.கடந்த ஆண்டு  ரிகானா பேகத்தை  தாலி கட்டி திருமணம் செய்து கொண்டேன்.  அதன்பிறகுதான் அவர் முதல் கணவரை விவாகரத்து செய்யாமல் அவருடன் தொடர்பில் இருப்பதும், திருமண ஆசை காட்டி என்னிடம் நகை, பணத்தை வாங்கி மோசடி செய்ததும் தெரிந்தது. ரிகானா பேகத்தின் மீது நடவடிக்கை எடுத்து எனது நகை, பணத்தை மீட்டுத்தர வேண்டும் " என புகார் மனுவில் கூறியுள்ளார்.

இதையடுத்து  பூந்தமல்லி போலீசார் ராஜ்கண்ணன் மற்றும் டி.வி. நடிகை ரிகானா பேகம் இருவருக்கும் சம்மன் அனுப்பி நாளை  ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

இந்தநிலையில்  நடிகை ரிகானா பேகம், வெளியிட்டுள்ள ஒரு ஆடியோவில் கூறி இருப்பதாவது:- ராஜ்கண்ணன், தனது தொழிலை விரிவுபடுத்துவதாகவும், அதில் கிடைக்கும் லாபத்தில் பங்கு தருவதாகவும் கூறி என்னிடம் இருந்து ரூ.18½ லட்சம் வாங்கிவிட்டு இதுவரை  எந்த பணத்தையும் எனக்கு தரவில்லை. எனது குடும்பத்துக்கும் ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கு காரணம் ராஜ்கண்ணன்தான்.இவ்வாறு அந்த ஆடியோவில் ரிகானா பேகம் பேசி உள்ளார். விசாரணைக்கு பின்னர்தான் யார் யாரிடம் ஏமாந்தர் என்று தெரியவரும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A well known small screen actress shows marriage intentions and commits fraudHotel owners shocking complaint


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->