கொரோனா வரும்னு சொல்லி இப்படியா பண்றது...? - பெண்களை ஏமாற்றி மொட்டை அடிக்க வைத்த போலி ஆசாமி... வெளிவந்த திடுக்கிடும் உண்மை!
fake guy who tricked women into shaving their heads because Corona coming shocking truth revealed
சேலம் ஆத்தூர் அருகேயுள்ள கொத்தாம்பாடி பகுதியில் வசிக்கும் பெண்ணுக்கு மர்ம நபர் ஒருவர் செல்போனில் தொடர்புகொண்டு, வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக அறிமுகப்படுத்திக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அப்போது, கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் சிறப்பு விழிப்புணர்வு நடவடிக்கையாக மொட்டை அடித்துக் கொண்டால், ஆண்களுக்கு ரூ.6 ஆயிரமும், பெண்களுக்கு ரூ.15 ஆயிரமும் அரசின் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று ஆசை வார்த்தைகள் கூறி நம்ப வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

தனது பேச்சை நம்ப வைப்பதற்காக, ஏற்கனவே சில பெண்கள் மொட்டை அடித்துக் கொண்டிருப்பது போன்ற புகைப்படங்களையும் அந்த நபர் வாட்ஸ்அப் மூலம் அனுப்பியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் நம்பிக்கை அடைந்த சுமார் 20 பேர் மொட்டை அடித்துக்கொள்ளத் தயாரான நிலையில், அவர்களில் 3 பெண்கள் உண்மையிலேயே மொட்டை அடித்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பின்னர், ஊக்கத்தொகை தொடர்பாக மீண்டும் அந்த நபரை தொடர்புகொள்ள முயன்றபோது, அவரது செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து தாங்கள் திட்டமிட்டு ஏமாற்றப்பட்டிருப்பதை பெண்கள் உணர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இந்த மோசடி குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் காவலர்களிடம் புகார் அளித்தனர்.
அதன் அடிப்படையில், பொதுமக்களை பொய்யான வாக்குறுதிகள் மூலம் ஏமாற்றிய மர்ம நபரை அடையாளம் காணும் பணியில் காவலர்கள் தீவிரமாக ஈடுபட்டு, பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
fake guy who tricked women into shaving their heads because Corona coming shocking truth revealed