இன்று மாலை திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்...! த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட்டை எதிர்கொள்ள உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை...! - Seithipunal
Seithipunal


இந்த ஆண்டு அதாவது 2026-2027-ம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பொது பட்ஜெட் வருகிற ஆகஸ்டு 5-ந் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து மறுநாள் (ஆகஸ்டு 6) வேளாண் துறைக்கான தனி பட்ஜெட்டும் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

த.வெ.க. தலைமையிலான அரசின் முதல் முழுமையான பட்ஜெட் என்பதால் அரசியல் வட்டாரங்களிலும், பொதுமக்களிடையிலும் மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இந்தச் சூழலில், வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. தனது சட்டமன்ற உறுப்பினர்களுக்கான முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை இன்று (ஜூலை 28) மாலை 5 மணிக்கு காணொலிக்காட்சி வாயிலாக நடத்துகிறது.

இந்தக் கூட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமை வகிக்கிறார். சட்டசபை விவாதங்களில் உறுப்பினர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறை, அரசை எதிர்கொள்ள வேண்டிய வியூகங்கள், மக்களின் முக்கிய பிரச்சினைகளை எந்த வரிசையில் முன்வைக்க வேண்டும், பட்ஜெட் விவாதத்தில் எந்தெந்த உறுப்பினர்கள் பேச வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவான வழிகாட்டுதல்களை வழங்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆளுங்கட்சியின் அறிவிப்புகள் மற்றும் திட்டங்களுக்கு எதிர்க்கட்சியாக எவ்வாறு பதிலளிக்க வேண்டும், மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை எந்த விதத்தில் வலியுறுத்த வேண்டும் என்பதற்கான செயல் திட்டங்களும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK MLAs meeting this evening Udhayanidhi Stalin advice face first budget Tvk government


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->