நேபாளத்தின் இடைக்கால பிரதமர் யார்..? ராணுவ அதிகாரிகளுடன் நடத்திய பேச்சிவார்த்தையில் இழுபறி நிலை..? - Seithipunal
Seithipunal


நேபாளத்தில், சமூக ஊடக தளங்களை ஒழுங்குபடுத்த அந்த நாட்டின் உச்ச நீதிமன்ற உத்தரவு படி அரசு புதிய விதிமுறைகளை உருவாக்கியது. அதன்படி,  'வாட்ஸாப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், யு டியூப், எக்ஸ்' உட்பட, 26 பிரபல சமூக ஊடகங்களுக்கு தடை விதித்து, அவற்றை ஒரே நாளில் முடக்கி அதிரடி நடவடிக்கை எடுத்தது.

இதனை எதிர்த்து இளைஞர்கள் கடந்த 08-ஆம் தேதி போராட்டத்தில் குதித்த நிலையில் அது வேணுமையாக மாறியது. அப்போது கூட்டத்தை கலைக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 பேர் பலியாகியுள்ளனர். 500 பேர் வரை காயமடைந்தமை காரணமாக கலவரம் மூண்டது.

இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் கடந்த 09-ஆம் தேதி காத்மாண்டுவில் உள்ள பாராளுமன்றம், சிங்க தர்பார் எனும் தலைமை செயலகம், உச்ச நீதிமன்றம், பிரதமர் மற்றும் முன்னாள் பிரதமர்களின் இல்லம் ஆகியற்றை சூறையாடினர்.இதனையடுத்து நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி பதவி விலகினார். அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகிய நிலையில், நாடு ராணுவம் ஆட்சிக்கு வந்தது. அத்துடன், நாடு முழுதும் ஊரடங்கு பிறப்பித்து கலவரத்தை ஒடுக்கியது.

இந்நிலையில் இரண்டு நாள் நடந்த கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. இதைத் தவிர, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தற்போது நேபாளத்தில் ஆட்சி கவிழ்ந்ததால், அடுத்து தேர்தல் நடக்கும் வரை அரசை வழிநடத்த இடைக்கால பிரதமரை தேடும் பணி நடந்து வருகிறது. 

அதன்படி, காத்மாண்டு மேயர் பாலென் ஷா, உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி, நேபாள மின்சார ஆணையத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி குல்மான் கிஷிங் ஆகியோரை போராட்டக் குழுவினர் பரிந்துரை செய்துள்ளனர்.

இதில், பாலென் ஷா வெளிப்படையாக தனக்கு விருப்பமில்லை என தெரிவித்துள்ள நிலையில்,  அடுத்த தேர்வாக சுசீலா கார்கி உள்ளார். அவருக்கு பாலென் ஷா ஆதரவு தெரிவித்துள்ளார். ஆனால், அவர் வயது 73 என்பதால், இளைஞர்களில் ஒரு பிரிவினர் அவரை ஏற்க தயாராக இல்லை என கூறப்படுகிறது.

இது தொடர்பாக ராணுவ தலைமையகம் வெளியே இளைஞர்கள் இரு பிரிவாக பிரிந்து ஒரு தரப்பினர் சுசீலா கார்கிக்கு ஆதரவாகவும், மற்றொரு தரப்பினர் குல்மான் கிஷிங்கை ஆதரித்தும் காரசாரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குல்மான் கிஷிங், நேபாளத்தின் மின்வெட்டு பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வந்ததோடு, ஊழல் இல்லாத நிர்வாகம் ஆகியவற்றுக்காக பிரபலமாக அறியப்படுகிறார். மேலும், இவர் இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாடு உடையவர்.

இந்நிலையில், அந்நாட்டில் இடைக்கால பிரதமராக யாரை நியமிக்க வேண்டும் என்பது குறித்து போராட்டத்தை முன்னெடுத்த இளைஞர்களின் பிரதிநிதிகள் ராணுவ அதிகாரிகளுடன் நடத்திய பேச்சில் அவர்களுக்குள் ஒருமித்த கருத்தை எட்ட முடியாததால், இழுபறி நீடிக்கிறதால் அடுத்த இடைக்கால பிரதம யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tensions rise in talks with military officials over Nepals interim prime minister election


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->