நாட்டில் அதிகம் தற்கொலைகள் நடக்கும் நகரங்கள்: சென்னைக்கு எந்த இடம்..? - Seithipunal
Seithipunal


இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் தற்கொலை நடக்கும் நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சென்னை இரண்டாவது இடமும், பெங்களூரு மூன்றாவது இடமும் பெற்றுள்ளது.

தற்கொலைகளை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்ற நிலையில்,தற்கொலை செய்வோர் எண்ணிக்கை குறித்த ஆய்வை, தேசிய சுகாதார இயக்கத்துடன் இணைந்து, நிம்ஹான்ஸ் மருத்துவமனை நடத்தியுள்ளது. 

ஆய்வின் படி, கர்நாடக மாநிலம், பெங்களூரில் இளம் வயதினர் பல்வேறு காரணங்களுக்காக தற்கொலை செய்து கொள்வதாக தெரியவந்துள்ளது.இதனை தடுக்க பெங்களூரில் உள்ள, 'நிம்ஹான்ஸ்' மனநல மருத்துவமனை, 2022-ஆம் ஆண்டு, 'நகர்ப்புற சுய தீங்கு ஆய்வு' எனும் திட்டத்தை தொடங்கியது.

குறித்த ஆய்வின் படி, கர்நாடகாவில் ஓராண்டுக்கு சராசரியாக, 13,000க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொள்வதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது தேசிய அளவில் தற்கொலை அளவு சராசரி, 12.4 சதவீதமாக உள்ளது. ஆனால், கர்நாடகாவில் தற்கொலை செய்வோரின் சராசரி 20.2 சதவீதமாக உள்ளது.

ஆனாலும், நாட்டிலேயே அதிக தற்கொலைகள் நடக்கும் நகரங்களில் டில்லி முதலிடத்தில் உள்ளது.  கர்நாடக மாநிலத்தில், 25 முதல் 39 வயதுக்கு உட்பட்ட ஆண்களே அதிகம் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 

கடந்த மூன்று ஆண்டுகளில் தற்கொலை முயற்சியில் பிழைத்த, 20,861 பேர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில், 55.76 சதவீதம் பேர் ஆண்கள்; 44.15 சதவீதம் பேர் பெண்கள் ஆவர்.
இவர்கள், நகர்ப்புற சுய தீங்கு ஆய்வு திட்டத்தில் பதிவு செய்யப்பட்டு,  தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றனர்.

 மேலும், அவர்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் அவர்கள் மீண்டும் தற்கொலை செய்ய முயற்சிப்பது தடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.இருப்பினும்,  இதில் 194 பேர் மீண்டும் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில், 37 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Where does Chennai rank in the list of cities with the highest suicide rates in the country


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->