மகாராஷ்டிராவின் பொறுப்பு ஆளுநராக ஆச்சார்யா தேவ்ரத் நியமனம்: ஜனாதிபதி உத்தரவு..!
Acharya Devrat appointed as the caretaker Governor of Maharashtra
மஹாராஷ்டிரா மாநில ஆளுநராக இருந்த தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று நாளை இந்தியாவின் 15-வது குரியரசு துணை தலைவராக பதவியேற்கவுள்ளார். இதனைத்தொடர்ந்து அவர், தான் வகித்து வந்த மஹாராஷ்டிரா மாநில ஆளுநர் பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
இதனை குடியரசு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டுள்ளார். இதனையடுத்து, அம்மாநிலத்திற்கு பொறுப்பு ஆளுநராக குஜராத் மாநில ஆளுநரை நியமித்து உத்தரவிட்டுள்ளார். தற்போது குஜராத் மாநிலத்தில் ஆச்சார்யா தேவ்ரத், ஆளுநராக உள்ளார். இவர் மஹாராஷ்டிரா மாநில ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பு வகிக்கவுள்ளார்.
English Summary
Acharya Devrat appointed as the caretaker Governor of Maharashtra