'இனிமேல் மின்சார ரெயில்களில் மற்றவர்களுக்காக இடம் பிடித்து வைக்க கூடாது'; சட்டப்படி குற்றம்; தெற்கு ரெயில்வே அறிவிப்பு..!
Southern Railway announces that passengers should not hold seats for others on electric trains
சென்னை மின்சார ரெயில்களின் தினமும் ஏராளமானோர் பயணம் வேலை மற்றும் இதர பயணங்களுக்காக சென்று வருகின்றனர். இந் நிலையில், ரெயிலில்சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சில பயணிகள் நடத்து கொள்வதாக அடிக்கடி புகார்கள் வருகிறது.
அதாவது, ரெயில்கள் நிற்பதற்கு முன்பே, ரெயிலில் இடம்பிடிப்பதற்காக சிலர் ஓடும் ரெயிலில் ஏறுவது, ரெயில் பெட்டிகளின் நுழைவாயிலில் அமர்ந்துகொள்வது, மற்ற பயணிகள் ஏறுவதற்கும், இறங்குவதற்கும் இடையூறாக இருப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இவ்வாறான செயல்களால் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ள நேரங்களில் பயணிகளுக்கு கடும் இடையூறாக உள்ளது. இந்நிலையில், 'முதலில் வருபவருக்கே முன்னுரிமை' என்ற அடிப்படையில் மட்டுமே ரயிலில் இருக்கைகளை நிரப்பப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், மற்றவர்களுக்காக இடம் பிடிப்பதும், இருக்கைகள் மீது கால்களை வைப்பதும் ரெயில்வே விதிகளின்படி தண்டனைக்குரிய குற்றமாகும் என்று
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
English Summary
Southern Railway announces that passengers should not hold seats for others on electric trains