பதற்றம் உச்சம் ! இஸ்ரேல் அணு மையம் அருகே ஈரான் ஏவுகணை தாக்குதல்...! - 160 பேர் காயம்
Tensions Peak Iranian Missile Attack Near Israeli Nuclear Facility 160 Injured
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் தற்போது நான்காவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், டிமோனா நகரை இலக்கு வைத்து ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேலின் வான் பாதுகாப்பு வளையத்தை மீறி நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல், அந்நாட்டின் முக்கிய அணுசக்தி மையத்திற்கு மிக அருகிலேயே நிகழ்ந்துள்ளதால் சர்வதேச அளவில் இது உற்றுநோக்கப்படுகிறது.
இதே நேரத்தில் ஆராத் உள்ளிட்ட பகுதிகளிலும் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் சுமார் 160-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, ஈரானின் நடான்ஸ் பகுதி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுவதால், இரு நாடுகளுக்கும் இடையிலான நேரடி மோதல் மேலும் தீவிரமடையும் சூழல் உருவாகியுள்ளது.
English Summary
Tensions Peak Iranian Missile Attack Near Israeli Nuclear Facility 160 Injured