தைவான் பதற்றம் உச்சம்! ஜப்பான்-சீனா பனிப்போர் தீவிரம்…! சீனர்கள் செல்ல வேண்டாம் என அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


தைவான் பிரச்சினையைச் சூழ்ந்து ஜப்பான்–சீனா உறவுகள் தீவிர பதற்றத்தின் விளிம்பில் நிற்கும் நிலையில், ஜப்பானுக்கு பயணம் செய்ய வேண்டாம் என தனது குடிமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது சீன அரசு.

கடந்த வாரம் டோக்கியோ பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜப்பான் பிரதமர் சனே தகைச்சி,“சீனா தைவானைத் தாக்கும் நிலை உருவானால், ஜப்பான் ராணுவம் நேரடி பதிலடி கொடுக்க தயார்”என்று தெரிவித்தது இரு நாடுகளுக்குமிடையேயான பதற்றத்தை மெருகேற்றி வைத்தது.

இந்த கடுமையான அறிக்கைக்கு சீன அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து, ஜப்பான் பிரதமர் பேச்சு இரு நாடுகளுக்கிடையேயான அரசியல் மற்றும் மக்கள் பரிமாற்றம் ஆகியவற்றை ஆழமாக பாதிப்பதாக தெரிவித்தனர்.

இதற்கிடையில், சீன வெளியுறவு அமைச்சகம் கடும் எச்சரிக்கை விடுத்து,“ஜப்பான் பிரதமரின் (சவாலான) கருத்துகள், ஜப்பானில் வசிக்கும் சீன குடிமக்களின் பாதுகாப்பையே ஆபத்துக்கு உள்ளாக்கும் விதத்தில் உள்ளது”என்று தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில், சீன அரசு தனது குடிமக்களுக்கு“தற்போது ஜப்பான் பயணத்தை தவிர்க்கவும், பாதுகாப்பு ஆபத்து மிக அதிகம்”என்ற கடுமையான அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Taiwan tension peak Japan China Cold War intensifies Announcement Chinese people should not go


கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?



Advertisement

கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?




Seithipunal
--> -->