வங்கதேசத்தில் இந்து காவல் அதிகாரியை உயிரோடு எரித்து கொன்ற கொடூரம்; மாணவர் தலைவர் கைது..!
Student leader arrested for burning a Hindu police officer alive in Bangladesh
வங்காளதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு செயல்பட்டு வருகிறது. வரும் பிப்ரவரியில் அங்கு பொது தேர்தல் நடைபெறவுள்ளது.
வங்கதேச முன்னாள் பிரதமர் ஹசீனா, கடந்த வருடம் மாணவர் போராட்டத்தை அடுத்து ஆட்சியில் இருந்து விலகி, இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். இந்நிலையில், அந்நாட்டின் ஹபிகஞ்ச் மாவட்டத்தில், பனியாசாங் காவல் நிலையத்தில் பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் சந்தோஷ் பாபு சவுத்ரி, கும்பல் ஒன்றால் தீ வைத்து உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில், மாணவர் தலைவரான மஹ்தி ஹசன் என்பவரை போலீசார் கைது செய்த நிலையில், அவர் சவுத்ரியை கொலை செய்ததை ஒப்பு கொண்டுள்ளார்.

அதாவது, அவரை தீ வைத்து எரித்து கொலை செய்தேன் என வெளிப்படையாகவே ஹசன் கூறிய நிலையில், வங்காளதேசத்தின் போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டார். எனினும், போலீசார் ஹசனை, இந்து அதிகாரி சவுத்ரி கொலைக்காக கைது செய்யவில்லை என தெரிவித்தனர்.
இதன் காரணமாக, முகமது யூனுஸ் அரசு, 2024-ஆம் ஆண்டு படுகொலையில் தொடர்புடையவர்களை பாதுகாப்பது என்ற முடிவை வெளிப்படுத்துகிறது என்று பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் ஹசனின் வீடியோ வைரலாகியுள்ளது.
இது வங்காளதேசத்தில் சட்டம் ஒழுங்கு பற்றி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளதோடு, காவல் நிலையத்தின் மீது தீ வைத்து எரித்து விடுவோம் என கொலை செய்த விசயங்களை ஹசன் வெளிப்படையாக கூறுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Student leader arrested for burning a Hindu police officer alive in Bangladesh