ஆஸ்திரேலியாவை வீழ்த்தி முதல்முறையாக தென் ஆப்பிரிக்கா 'சாம்பியன்! 
                                    
                                    
                                   South Africa is the champion for the first time by defeating Australia
 
                                 
                               
                                
                                      
                                            நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக தென் ஆப்பிரிக்கா அணி ஐசிசி டெஸ்ட் சாம்பியன் ஆனது.
நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்சில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் முறையே ஆஸ்திரேலியா 212 ரன்களும், தென்ஆப்பிரிக்கா 138 ரன்களும் எடுத்தன 2-வது இன்னிங்சை ஆடிய  65 ஓவர்களில் 207 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. தென்ஆப்பிரிக்கா தரப்பில் ரபடா 4 விக்கெட்டும், லுங்கி இங்கிடி 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.
முதல் இன்னிங்ஸ் முன்னிலையும் சேர்த்து ஆஸ்திரேலிய அணி 282 ரன்களை தென்ஆப்பிரிக்காவுக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது.  சவாலான இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்காவுக்கு ஆரம்பத்திலேயே ரையான் ரிக்கெல்டன் 6 ரன்னில், மிட்செல் ஸ்டார்க் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார்.
2-வது விக்கெட்டுக்கு எய்டன் மார்க்ரமும், வியான் முல்டெரும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். 
அடுத்து வந்த கேப்டன் பவுமாவுக்கு அதிர்ஷ்டம் துணை நின்றது.  வாய்ப்பை சரியாக பயன்படுத்தி, தன்னை வலுவாக நிலைநிறுத்திக் கொண்டார். சிகர்களை குஷிப்படுத்திய மார்க்ரம் தனது 8-வது சதத்தை நிறைவு செய்தார். 
தென்ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு  69 ரன்களே தேவைப்பட்ட நிலையில், இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. பவுமா 66 ரன்னிலும், ஸ்டப்ஸ் 6 ரன்னிலும், ஆட்டமிழந்தனர். சிறப்பாக விளையாடி வந்த மார்க்ரம், 136 ரன்கள் எடுத்து ஹேசல்வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி, 83.4ஓவர்களில் இலக்கை கடந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன், முதல் முறையாக ஐசிசி டெஸ்ட் சாம்பியன் ஆனது.
                                     
                                 
                   
                       English Summary
                       South Africa is the champion for the first time by defeating Australia