பெண்ணை உயிரோடு முழுங்கிய மலைப்பாம்பு.. வயிற்றை கிழித்து எடுக்கப்பட்ட பெண்.!
snake eat women in Indonesia
இந்தோனேஷியாவில் உள்ள ஜாம்பி மாகாணத்தில் 52 வயதான ஜகரா என்ற பெண் அதே பகுதியில் உள்ள ரப்பர் தோட்டத்தில் பணியாற்றி வந்துள்ளார். வழக்கம் போல கடந்த ஞாயிற்றுக்கிழமையும் ரப்பர் தோட்டத்திற்கு வேலைக்கு சென்ற அவர் இரவு வெகு நேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை தேட ஆரம்பித்தனர். பின்னர், அவர்கள் ரப்பர் தோட்டத்திற்கு அருகே சென்ற போது அங்கே 16 அடி நீளம் கொண்ட ஒரு மலைப்பாம்பு பெரிய அளவிலான இறையை முழுங்கியவாறு நகர முடியாமல் கிடந்தது.

ஒருவேளை அந்த பாம்பு ஜகராவை முழுங்கிருக்கலாம் என்று சந்தேகப்பட்ட உறவினர்கள் உடனடியாக அந்தப் பாம்பின் வயிற்றை கிழித்து பார்த்தபோது உள்ளே ஜகரா சடலமாக இருந்துள்ளார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் துடிதுடித்து அழ ஆரம்பித்தனர். பின் அவரது உடலை அடக்கம் செய்து இருக்கின்றனர்.
இந்த சம்பவம் குறித்த செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால், இந்தோனேசியாவில் இப்படிப்பட்ட சம்பவங்கள் புதிதல்ல. இது போல ஏற்கனவே, சிலரை மலைப்பாம்புகள் கொன்று விழுங்கி இருப்பது நிகழ்ந்துள்ளது.
English Summary
snake eat women in Indonesia