96 ஆண்டுகளாக குழந்தைகள் பிறக்காத நாடு! தொடரும் வரலாறு! - Seithipunal
Seithipunal


உலகின் சிறியதொரு நாடாகும் வாடிகன் நகரம், தனித்துவமான நிர்வாக அமைப்பும் ஆன்மீக முக்கியத்துவமும் கொண்டது.

ஆனால், இந்நகரம் தொடர்பான ஒரு ஆச்சரியமான தகவல் வெளியாகியுள்ளது – கடந்த 96 ஆண்டுகளாக ஒரு குழந்தை கூட இங்கு பிறக்கவில்லை என்பது தான் அது.

வாடிகனில் ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகிறார்கள். அவர்கள் பெரும்பாலும் பாதிரியார், பிஷப், கார்டினல்கள், மற்றும் மற்ற மத நிர்வாக பணிகளில் இருக்கும் ஆன்மீகத் தலைவர்களே.

இவர்கள் திருமணம் செய்யமுடியாததால், இயற்கையாகவே குடும்பங்கள் இல்லாத நிலை அங்கு உருவாகியுள்ளது. 

இதனால்தான், கடந்த 96 ஆண்டுகளாக வாடிகனில் ஒரு புதிய குழந்தை பிறப்பு கூட பதிவாகவில்லை. அரசு பதிவுகளிலும் மருத்துவத் தரவுகளிலும் குழந்தை பிறந்த பதிவு இல்லாதது இதற்குச் சாட்சியாகக் கூறப்படுகிறது.

இது ஒரு நாட்டின் சாதாரண வாழ்க்கை முறைக்கு மாறானதாயினும், வாடிகனின் ஆன்மீகக் கட்டுப்பாடுகளும், அதன் சிறப்பான பண்பாடும் இதற்குக் காரணமாக விளங்குகிறது.

உலகில் பிற நாடுகள் வளர்ச்சி, மகப்பேறு வீதிகள் குறித்து கவலைப்படுகிறபோதே, வாடிகன் நகரம் முற்றிலும் வேறுபட்ட பாதையில் பயணிக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

smallest country Vatican City is the no birth in 96 years in the world


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->