கோடரியால் 13 வயது சிறுவன் பள்ளி வளாகத்தில் கொடூர கொலை..! 16 வயது சிறுவன் கைது.. சிங்கப்பூரில் பேரதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


கொலை, கொள்ளை போன்ற குற்றங்கள் குறைவாக நடுக்கும் நாடுகளின் உலகளாவிய பட்டியலில் சிறந்த நாடுகளில் ஒன்றாக சிங்கப்பூரும் இருந்து வருகிறது. இந்நிலையில், மாணவனை சக மாணவன் கொடூரமாக கொலை செய்த பயங்கரம் அங்கு நடந்துள்ளது. 

சிங்கப்பூரில் உள்ள ரிவர் வேலி உயர்நிலைப்பள்ளி பிரதான பள்ளி ஆகும். இப்பள்ளிக்கூடத்தில் நேற்று முன்தினம் வழக்கம்போல வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில், கழிவறைக்கு சென்ற மாணவர்கள் ஒரு மாணவன் இரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். 

மாணவனின் உடல் அருகே இரத்தம் படிந்த கோடரி கிடந்துள்ளது. இதனை வைத்து மாணவனை கோடரி வைத்து கொலை செய்தது உறுதியாகவே, யார்? மாணவரை கொலை செய்தார்? என விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. விசாரணையில், அதிர்ச்சி திருப்பமாக பள்ளியில் பயின்று வந்த 16 வயது சிறுவன், 13 வயது சிறுவனை கோடரியால் கொடூரமாக வெட்டிக்கொலை செய்தது உறுதியானது. 

16 வயது சிறுவனின் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அவனை கைது செய்து கொலைக்கான காரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சிங்கப்பூர் நாடு முழுவதும் தெரியவந்து பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸின் வீரியத்தை கருத்தில் கொண்டு முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Singapore School Student Murder by Axe Police Arrest 16 Aged Another Student


கருத்துக் கணிப்பு

குட்காவை முற்றிலும் தமிழகத்திலிருந்து ஒழிப்பதற்கு தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள்Advertisement

கருத்துக் கணிப்பு

குட்காவை முற்றிலும் தமிழகத்திலிருந்து ஒழிப்பதற்கு தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள்
Seithipunal