பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடு: ஐக்கிய நாடுகள் சபை விவாதத்திலும் அசிங்கப்பட்ட பாகிஸ்தான்..!
Shocking statement by UN human rights lawyer calling Pakistan a state sponsor of terrorism
ஹமாஸ் பயங்கரவாத தலைவர்களை குறிவைத்து, மேற்காசிய நாடான கத்தார் மீது சமீபத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்திய சம்பவம் உலக நாடுகள் இடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் விவாதம் நடந்தது.
அப்போது, மனித உரிமைகள் வழக்கறிஞரும், ஐநாவின் செயல்பாட்டை கண்காணிக்கும் அமைப்பான 'ஐநா வாட்ச்' என்ற நிறுவனத்தின் இயக்குநருமான ஹில்லெல் நியூயர் என்பவர், கடந்த 2012-இல் அமெரிக்காவால் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட ஹமாஸ் அமைப்பை ஆதரிக்கும் கத்தாரை விமர்சித்துள்ளார்.
அத்துடன், பயங்கரவாதிகளை ஆதரிக்கும் நாடாக கத்தார் உள்ளது என்றும், கடந்த 2011-இல் பாகிஸ்தானில், பயங்கரவாதி ஒசாமா பின்லாடன் கொல்லப்பட்ட போது, நீதி நிலை நாட்டப்பட்டது என ஐநா தலைவர் பாராட்டினார். ஆனால், தற்போது இஸ்ரேலை கண்டிக்கிறார் என பேசியுள்ளார்.

அப்போது குறுக்கிட்ட பாகிஸ்தான் பிரதிநிதிகள், ' ஹில்லெல் நியூயர் குற்றச்சாட்டுகளை நிராகரிக்கிறதாகவும், எந்த உறுப்பினரும் ஐநாவின் விதிமுறைகளையும், இறையாண்மை மிக்க நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டு கொள்கைகளை மீறக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளனர்.
இதனையடுத்து ஹில்லெல் நியூயரை ஐநா தலைவர் மீண்டும் பேச அனுமதி மறுத்துள்ளார். அத்துடன், பேச்சு முடிய 04 நொடிகள் மட்டுமே உள்ளதாக தெரிவித்தார். அப்போது அந்த நான்கு நொடியை பயன்படுத்திக் கொண்ட ஹில்லெல் நியூயர்,' தலைவர் அவர்களே, பயங்கரவாதத்தை ஆதரிக்கும் மற்றொரு நாடு பாகிஸ்தான், ' என்று கூறி தனது பேச்சை முடித்துக்கொண்டுள்ளார். இதை பார்த்து பாகிஸ்தான் பிரதிநிதிகள் திகைத்து போயுள்ளனர்.
English Summary
Shocking statement by UN human rights lawyer calling Pakistan a state sponsor of terrorism