உக்ரைனுடன் அமைதி பேச்சு வார்த்தை தற்காலிகமாக நிறுத்தம்: ஐரோப்பிய நாடுகள்: ரஷ்யா திட்டவட்டம்..!
Russia temporarily suspends peace talks with Ukraine
உக்ரைனுடனான அமைதிப்பேச்சுவார்த்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. குறித்த அமைதி பேச்சுக்கு ஐரோப்பிய நாடுகள் தடையாக உள்ளதாக ரஷ்ய அதிபர் புடின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
உக்ரைன் மீது, கடந்த 2022-இல் ரஷ்யா தொடர்ந்த போர், மூன்றாண்டுகளான நடந்து வருகின்றது. குறித்த போரை நிறுத்த பல்வேறு உலக நாடுகள் முயற்சி மேற்கொண்டும் அனைத்தும் தொலைவில் முடிவடைந்துள்ள.
இந்நிலையில் சமீபத்தில் சீனாவின் தியான்ஜினில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு நடைப்பெற்றது. இதில் ரஷ்ய அதிபர் புடின் பங்கேற்றார். அப்போது, 'உக்ரைன் உடனான போரை பேச்சு மூலம் நிறுத்த இன்னும் வாய்ப்புள்ளது' என்று தெரிவித்தார். அத்துடன், 'தேவைப்பட்டால் ஆயுதம் மூலமே ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வரும்' என்றும் எச்சரிக்கையும் விடுத்து இருந்தார்.

இதனையடுத்து, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் சந்தித்து பேச தயாராக இருப்பதாகவும் ஆனால், உறுதியான முடிவுகளை தருவதாக இருந்தால் மட்டுமே பேச்சுக்கு தயார் எனவும் ரஷ்யா அதிபர் புடின் தெரிவித்திருந்தார். குறித்த பேச்சுக்கான இடமாக மாஸ்கோவை ஏற்க உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மறுத்து விட்டார். அத்தோடு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என்றும் ஜெலன்ஸ்கி வலியுறுத்தினார்.
இந்நிலையில், ரஷ்ய அதிபரின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் நேற்று கூறுகையில், 'ரஷ்யா - உக்ரைன் இடையேயான அமைதிப்பேச்சு தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த தடைக்கு ஐரோப்பிய நாடுகளே காரணம், என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Russia temporarily suspends peace talks with Ukraine