ஜப்பானில் அதிர்ச்சி ஏலம்...! 243 கிலோ டுனா மீன்… விலை ரூ.28 கோடி....! -வைரல் வீடியோ - Seithipunal
Seithipunal


ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் செயல்பட்டு வரும் உலகப் புகழ்பெற்ற டோயோசு மீன் சந்தையில் புத்தாண்டை முன்னிட்டு நடைபெற்ற ஏலம், இந்த ஆண்டு வரலாற்றுச் சாதனையை பதிவு செய்துள்ளது. ஜப்பானின் ஓமா கடற்பகுதியில் பிடிக்கப்பட்ட, தனித்துவமான சுவைக்கும் தரத்திற்கும் பெயர்போன புளூபின் டுனா மீன் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த வகை மீன்களை வாங்குவதற்காக, ஒவ்வொரு ஆண்டும் வணிகர்களிடையே கடும் போட்டி நிலவுவது வழக்கமாகும்.அந்த வகையில், இந்த ஆண்டு நடைபெற்ற புத்தாண்டு சிறப்பு ஏலத்தில் 243 கிலோ எடை கொண்ட புளூபின் டுனா மீன் ஏலத்திற்கு விடப்பட்டவுடன், வணிகர்கள் ஒருவரையொருவர் மிஞ்சும் வகையில் போட்டிபோட்டு விலையை உயர்த்தினர்.

இறுதியில் அந்த ஒரே டுனா மீன் சுமார் ரூ.28 கோடி என்ற அதிர்ச்சியூட்டும் விலையில் விற்பனையானது.இந்த வரலாற்றுச் சாதனை ஏலத்தில், ஜப்பானில் பிரபலமான ‘சுஷி ஜான்மை’ (Sushi Zanmai) உணவக சங்கிலியின் உரிமையாளர் கியோஷி கிமுரா அந்த டுனா மீனை கைப்பற்றினார்.

இதன்மூலம், கடந்த புத்தாண்டில் பதிவான ரூ.11 கோடி என்ற முந்தைய சாதனை, இந்த ஆண்டில் பல மடங்கு விலையுடன் முறியடிக்கப்பட்டது.

இந்த ஏலம், ஜப்பானில் புளூபின் டுனா மீனுக்கு உள்ள மதிப்பையும், அதன் தரத்திற்கு வணிக உலகம் அளிக்கும் உயர்ந்த முக்கியத்துவத்தையும் மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளது.



இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

shocking auction Japan 243 kg tuna fish priced 28 crore viral video


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->