வரும் 12-ந் தேதி விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி-சி 62 ராக்கெட்..!
The PSLV C62 rocket will be launched into space on the 12th of this month
பி.எஸ்.எல்.வி-சி 62 ராக்கெட்டை, வருகிற 12-ந்தேதி இஸ்ரோ விண்ணில் ஏவவுள்ளது. இது தொடர்பாக இஸ்ரோ தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:- ''பி.எஸ்.எல்.வி-சி62 திட்டத்தின் ராக்கெட்டை வருகிற 12-ந்தேதி காலை 10:17 மணிக்கு ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து ஏவ திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ஏவுதலை ஏவுதல் காட்சிக் கூடத்தில் இருந்து பொதுமக்கள் பார்க்க ஆன்லைனில் lvg.shar.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பி.எஸ்.எல்.வி-சி62 ராக்கெட் மூலம் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம் பாட்டு அமைப்பால் (டிஆர்டிஓ) உருவாக்கப்பட்ட மேம்பட்ட புவி கண் காணிப்பு-ஹைப்பர் ஸ்பெக்ட்ரல் செயற்கைக் கோளான இ.ஒ.எஸ்-என்1 (அன்வேஷா) விண்ணில் ஏவப்படுகிறது.
இது பட மெடுக்கும் செயற்கைக் கோள் ஆகும். மேலும், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட கெஸ்ட்ரல் இனிஷியல் டெமான்ஸ்ட் ரேட்டர் என்ற சிறிய செயற்கைக்கோள் மற்றும் இந்தியா, மொரீஷியஸ், லக்சம்பர்க், ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஐரோப்பா மற்றும் அமெரிக்கா முழுவதும் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் 17 துணை செயற்கைக்கோள்களும் ராக்கெட் மூலம் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது.'' என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
English Summary
The PSLV C62 rocket will be launched into space on the 12th of this month