சீனா ஷாங்காயில் அதிர்ச்சி! பரபரப்பான சாலை கணநேரத்தில் பள்ளமாக உள்வாங்கல்...! - பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வைரல்
Shock Shanghai China Busy road suddenly sinks pothole Horrifying CCTV footage goes viral
சீனாவின் ஷாங்காய் நகரில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த ஒரு முக்கிய சாலை திடீரென உள்வாங்கிய சம்பவம் சிசிடிவி காட்சிகளாக வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும், வழக்கமாக வாகன நெரிசல் நிறைந்த அந்தப் பகுதியில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.அப்போது அங்கிருந்த தொழிலாளர்கள் முன்னிலையிலேயே சாலை முதலில் மெல்ல விரிசல் விட்டது.
சில விநாடிகளில் அந்த விரிசல் பெரிதாகி, முழு தரையும் சரிந்து மிகப்பெரிய பள்ளமாக மாறியது. அதுமட்டுமின்றி,அருகில் குவிக்கப்பட்டிருந்த கட்டுமானப் பொருட்கள் அனைத்தும் அந்தப் பள்ளத்திற்குள் சரிந்து விழுந்தன.
அதிஷ்டவசமாக, இந்த திடீர் விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. இருப்பினும் அருகிலுள்ள கட்டிடங்களில் லேசான சேதங்கள் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ஷாங்காய் நகரின் மென்மையான வண்டல் மண் தன்மை, நிலத்தடி நீரை தொடர்ந்து உறிஞ்சும் செயல்பாடுகள் மற்றும் வேகமாக அதிகரித்து வரும் நகர வளர்ச்சி ஆகியவை இத்தகைய தரை உள்வாங்கல்களுக்கு காரணமாக இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கு முன்னதாகவும் கடந்த ஆண்டு ஜனவரி 2024-இல் மின்ஹாங் மாவட்டத்தில் கழிவுநீர் குழாய் உடைந்ததால் சுமார் 10 மீட்டர் பரப்பளவில் சாலை திடீரென சரிந்த சம்பவம் ஏற்பட்டது. இதுபோன்ற சம்பவங்கள் நகரத்தில் அடிக்கடி நிகழ்வது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Shock Shanghai China Busy road suddenly sinks pothole Horrifying CCTV footage goes viral