தி லயன் கிங்’ நாலா குரல் நடிகை இமானி ஸ்மித் கொலையில் அதிர்ச்சி...! - நண்பர் கைது...! - Seithipunal
Seithipunal


‘தி லயன் கிங்’ கார்ட்டூன் படத்தில் இளம் ‘நாலா’ கதாபாத்திரத்திற்கு பின்னணி குரல் கொடுத்து உலகளவில் கவனம் பெற்ற நடிகை இமானி ஸ்மித் (25) கொலை செய்யப்பட்ட சம்பவம் திரையுலகத்தையும் ரசிகர்களையும் உலுக்கியுள்ளது.

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தில் வசித்து வந்த இமானி ஸ்மித், கடந்த டிசம்பர் 21-ஆம் தேதி தனது இல்லத்தில் ரத்தக்காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டார்.

உடலில் பல இடங்களில் கத்திக் குத்துக் காயங்கள் இருந்த நிலையில், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவரை காப்பாற்ற மருத்துவர்கள் தீவிரமாக முயன்றனர்.

ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.இந்த கொடூர சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்திய காவல்துறையினர், இமானி ஸ்மித்தின் ஆண் நண்பர் ஜோர்டன் டி. ஜேக்சன் என்பவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

இந்த கொலைக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இளம் வயதிலேயே புகழின் உச்சத்தை தொட்ட நடிகையின் திடீர் மரணம், ஹாலிவுட் வட்டாரத்திலும் சமூக வலைதளங்களிலும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Shock over murder The Lion King voice actress Imani Smith Friend arrested


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->