அமெரிக்காவில் பரபரப்பு...!!! டைட்டானிக் ஸ்டைலில் டிரம்ப்-எப்ஸ்டீன் சிலை...!
Sensation US Trump Epstein Statue Style Titanic
சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை கடத்தி பணக்காரர்களிடம் பாலியல் சுரண்டலுக்காக வழங்கியதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட அமெரிக்க தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன், இதற்காக தனிப்பட்ட தீவையே பயன்படுத்தியதாக பரபரப்பான தகவல்கள் வெளியானது.
2019 ஜூலையில் கைது செய்யப்பட்ட அவர், நியூயார்க் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அதே ஆண்டு ஆகஸ்ட் 10-ஆம் தேதி தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.எப்ஸ்டீன் பல முக்கிய நபர்களுடன் தொடர்புடைய வீடியோக்கள், புகைப்படங்கள், ஆவணங்கள் உள்ளிட்ட தகவல்களை சேகரித்து வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

“எப்ஸ்டீன் கோப்புகள்” என அழைக்கப்படும் இந்த ஆவணங்கள் நீதிமன்ற உத்தரவின்படி படிப்படியாக வெளியிடப்பட்டு வருகின்றன.அந்த கோப்புகளில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பெயரும் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டிசியில் உள்ள நேஷனல் மால் பகுதியில், எப்ஸ்டீன் மற்றும் டிரம்ப் இணைந்து நிற்பதைப் போல ஒரு சர்ச்சை சிலை நிறுவப்பட்டுள்ளது.
டைட்டானிக் படத்தின் புகழ்பெற்ற “ஜாக்-ரோஸ்” காட்சி போல வடிவமைக்கப்பட்ட இந்த சிலையை “Secret Handshake” என்ற கலை அமைப்பு நிறுவியுள்ளது. டிரம்புக்கு எதிரான போராட்டத்தின் அடையாளமாக இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு முன்பும் அதே பகுதியில் எப்ஸ்டீன்-டிரம்ப் கைகோர்த்து நிற்கும் சிலை நிறுவப்பட்டு பின்னர் அகற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
Sensation US Trump Epstein Statue Style Titanic