உகாண்டாவில் பயங்கரம்.! அமைச்சர் சுட்டுக்கொலை.. பாதுகாவலர் வெறிச்செயல்..! - Seithipunal
Seithipunal


கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் தொழிலாளர் துறை துணை அமைச்சரான சார்லஸ் எங்கோலாவை அவரது பாதுகாவலர் சுட்டுக்கொன்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உகாண்டாவின் ஆளும் அரசாங்கத்தின் கர்னல் மூத்த உறுப்பினரான சார்லஸ் எங்கோலா தொழிலாளர் துணை அமைச்சராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று அதிகாலை உகாண்டாவின் தலைநகர் கம்பாலாவின் புறநகர் பகுதியிலுள்ள அமைச்சரின் வீட்டில் அமைச்சருக்கும், அவரது பாதுகாவலருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து இவர்களிடையே வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த பாதுகாவலர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் அமைச்சரை சுட்டுகொன்றார். இதைத்தொடர்ந்து பாதுகாவலர் தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது தொடர்பாக காவல்துறையினர் கூறும் பொழுது, பாதுகாவலர் சபிதி ஒரு மாதத்திற்கு முன்பு அமைச்சரின் பாதுகாப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டதாகவும், பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படாததால் அமைச்சருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர். அமைச்சரின் இழப்புக்கு உகாண்டா அதிபர் யோவேரி முசவேனி உள்பட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Security guard shot minister as non payment of salary in Uganda


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->