பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷ்யா: மன்னிப்பு கோரினார் புடின்..! - Seithipunal
Seithipunal


அஜர்பைஜான் நாட்டு பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு, ரஷ்ய அதிபர் புடின் மன்னிப்பு கோரியுள்ளார். அஜர்பைஜான் நாட்டு பயணிகள் விமானம் கஜகஸ்தான் மீது பறந்தபோது, விழுந்து நொறுங்கியது. 

அதில் சென்ற பயணிகளில் 38 பேர் உயிரிழந்ததோடு,. 29 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். குறித்த விமானம் விழுந்து நொறுங்கியதற்கு, ரஷ்ய ஏவுகணை தாக்குதலே காரணம் என்று உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகள் கூறின. இதை ரஷ்யா முதலில் மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது பல்வேறு ஆய்வுகள், தரவுகளின் அடிப்படையில், ரஷ்ய விமான எதிர்ப்பு ஏவுகணைகள் தாக்கியதே காரணம் என்று கண்டறியப்பட்ட்டுள்ளது.

விமானம் தாக்கப்பட்டதற்கு, ரஷ்ய அதிபர் புடின், அஜர்பைஜான் அதிபரிடம் மன்னிப்பு கோரியதாக, சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.அவர்  அஜர்பைஜான் நாட்டு அதிபருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு  மன்னிப்பு கோரினார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உக்ரைன் நாட்டு ட்ரோன்களுக்கு எதிராக, செச்சன்யா தலைநகர் கிராஸ்னி அருகே, விமான எதிர்ப்பு ஏவுகணைகள் ஏவுப்பட்டன என்று இன்று கிரெம்ளின் மாளிகை அறிக்கை வெளியிட்டது. 

எனினும், விமானத்தை வீழ்த்தியது பற்றி அந்த அறிக்கையில் எதுவும் குறிப்பிடவில்லை என்பதும் கவனத்தில் கொள்ளத்தத்தக்கது.
இந்நிலையில், 'வெளியில் இருந்து நடத்தப்பட்ட தாக்குதலே, விமானம் விழுந்து நொறுங்க காரணம்' என்று, அமெரிக்கா மற்றும் அஜர்பைஜான் சார்பில் வெள்ளிக்கிழமை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Russian President Putin apologized for shooting down a passenger plane


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->