பள்ளிக்கு செல்ல தாமதம் ஆகிறது - மோடிக்கு கடிதம் எழுதிய 5 வயது சிறுமி..!!
five years old girl write letter to pm modi for help to clear traffic in bengalur
உலக அளவில் போக்குவரத்து நெரிசலில் 2-வது இடத்தை பெற்றுள்ள கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதனைத் தவிர்க்க மெட்ரோ ரெயில் சேவை, மேம்பாலங்கள் கட்டுதல் உள்ளிட்ட பல முயற்சிகளை மேற்கொண்டும் தீர்வு கிடைக்கவில்லை.
இந்த நிலையில் பிரதமரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக பெங்களூருவை சேர்ந்த ஐந்து வயது சிறுமியான ஆர்யா போக்குவரத்து நெரிசல் குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதனை அவரது தந்தை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த கடிதத்தில், சிறுமி எழுதியிருப்பதாவது:- “நரேந்திர மோடி ஜி” போக்குவரத்து நெரிசல் அதிகம். நாங்கள் பள்ளிக்கு செல்ல தாமதம் ஆகிறது. அதுபோல் வேலைக்கு செல்வோரும் அலுவலகத்திற்கு செல்லவும் சிரமப்படுகிறார்கள். அதுமட்டுமின்றி சாலையும் மிகவும் மோசமாக உள்ளது. தயவு செய்து உதவுங்கள்” என்றுத் தெரிவித்துள்ளார். இதற்கிடையே இந்த கடிதம் சமூகவலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.
இதை பார்த்த பலரும் சிறுமியை பாராட்டியுள்ளனர். இந்த கடிதத்தை பார்த்து பிரதமர் மோடியின் அலுவலக எக்ஸ் தள கணக்கும் லைக் போட்டுள்ளது. இதுவரை இந்த கடிதத்தை 5 லட்சத்து 96 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்ததுடன் பலரும் இந்த கடிதம் பற்றி தங்களது கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.
English Summary
five years old girl write letter to pm modi for help to clear traffic in bengalur