ரஷ்யாவின் தாக்குதலை சமாளிக்க உக்ரைனுக்கு இராணுவ உதவி! அமெரிக்கா அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


ரஷ்யாவின் தாக்குதலை சமாளிக்கும் வகையில் 2250 கோடி மதிப்பிலான ராணுவ உபகரணங்களை உக்ரைனுக்கு வழங்க இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் உக்ரைனின் பாதுகாப்பு திறனை வலுப்படுத்தவும், ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைகளை சமாளிக்கவும், 2250 கோடி ரூபாய் மதிப்பிலான ராணுவ உபகரணங்களை உக்ரைனுக்கு வழங்க உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்த உபகரணங்களில் பாதுகாப்பு தொலைத் தொடர்பு கருவிகள், மருத்துவ உபகரணங்கள், வெடிமருந்துகள், தளவாட உதிரிபாகங்கள், தோட்டாக்கள், இருளிலும் குறிபார்த்து தாக்கும் கருவிகள், லேசர் ராக்கெட் ட்ரோன்கள் அடங்கும் என அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

இதுவரை 106 கோடி டாலர் மதிப்பிலான இராணுவ உதவிகள் உகரைனுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Russia Ukraine war America support Ukraine


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->