மேற்கத்திய நாடுகளின் ஆயுத உதவி உக்ரைன் மக்களின் துன்பத்தை நீடிக்கும் - ரஷ்யா - Seithipunal
Seithipunal


இரண்டாம் உலகப் போருக்கு பிறகு 1949-ம் ஆண்டு அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட 12 நாடுகள் இணைந்து நேட்டோ என்ற ராணுவ கூட்டமைப்பை உருவாக்கியது. தற்போது நேட்டோவில் 30 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

இந்நிலையில் ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் இணைய உக்ரைன் விரும்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி உக்ரைன் மீது போரை தொடங்கியது. தற்பொழுது போர் 10 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும் இப்போரை முடிவுக்கு கொண்டுவர உலக நாடுகள் மற்றும் ஐநா மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்து, இருதரப்புகளும் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். இப்போரின் தொடக்கத்திலிருந்து, ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொண்டு பதில் தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் பொருளாதார ரீதியாகவும், ராணுவ உதவிகளையும் வழங்கி வருகிறது.

இதில் குறிப்பாக உக்ரைனுக்கு பல பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகளை அமெரிக்கா வழங்கி வருகிறது. இந்நிலையில் மேற்கத்திய நாடுகளின் ஆயுத உதவி உக்ரைன் மக்களின் துன்பத்தை மட்டுமே நீடிக்கும் என்றும், உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதால் எந்த மாற்றமும் நிகழ்ந்து விடாது என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Russia says Arms aid from the West will prolong the suffering of the people of Ukraine


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->