திடீரென உடைந்த அணை...! பாய்ந்த வெள்ளம்... 12 பேர் பலி.. 242 பேர் மாயம்..!! வெளியான அதிர்ச்சி தகவல்.!! - Seithipunal
Seithipunal


ரஷ்ய நாட்டிலுள்ள சைபீரிய பிராந்தியத்திற்கு அருகே இருக்கும் கிராஸ்நோயார்ஸ்க் பகுதியில் தங்கச் சுரங்கம் அமைத்து செயல்பட்டு வருகிறது. அந்த சுரங்கத்தில் இருந்து வெளியேறும் நீரை சேமிப்பதற்காக அங்குள்ள தொழில் நுட்பத்தின்படி நீர்த் தேக்கமும் கட்டப்பட்டுள்ளது. 

இந்த தங்க சுரங்கத்தில் இரவு நேரத்தில் சுமார் 270 பணியாளர்கள் சுரங்கத்தின் உள்ளே பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில்., அங்குள்ள நேரப்படி நள்ளிரவு 2 மணிக்கு திடீரென சுரங்கத்தின் நீர்த்தேக்க அணையானது எதிர்பாராதவிதமாக உடைந்தது. 

இதனையடுத்து நொடிப்பொழுதில் சுரங்கத்திற்குள் தண்ணீர் மளமளவென புகுந்ததை அடுத்து., இந்த விபத்தில் 12 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியான நிலையில்., 14 பேர் படுகாயம் அடைந்தனர். 

இந்த விஷயம் குறித்து தகவலறிந்த மீட்பு படையினர்., உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபடத் தொடங்கினார். இந்த விபத்தில் படுகாயமடைந்த 14 பேர் மற்றும் உயிரிழந்த 12 பேரை கண்டறிந்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

ரஷ்யநாட்டில் இருக்கும் அவசர அமைச்சகத்தின் அடிப்படையில்., சுமார் 200 அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும்., தங்க சுரங்கத்தில் பலர் சிக்கி இருப்பதால் அவர்கள் உயிருடன் உள்ளாரா? இல்லையா? என்பது குறித்த பயமும் அச்சமும் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீட்பு பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russia Dam collapsed in gold mine 12 peoples died


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->