ஈரானுக்கு ரஷ்யா என்றும் விசுவாசமான நண்பன்...! - போர் பதற்றத்திற்கு மத்தியில் விளாடிமிர் புதின் உறுதி
Russia Always Loyal Friend Iran Vladimir Putin Affirms Amidst War Tensions
ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளின் போர் தீவிரமடைந்து வரும் சூழலில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், ஈரானுக்கு ரஷ்யா என்றும் விசுவாசமான நண்பனாகவும், நம்பகமான கூட்டாளியாகவும் தொடரும் என்று தெரிவித்துள்ளார்.

ஈரானின் புத்தாண்டை முன்னிட்டு அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா மொஜ்தபா காமேனி மற்றும் அதிபர் மசூத் பெஷெஷ்கியான் ஆகியோருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த புதின், ஈரானிய மக்கள் இந்தச் சோதனையான காலத்தைக் கடந்து வர வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்கள் மத்திய கிழக்கு பிராந்தியத்தைப் பாதிப்பதோடு, உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை ஏற்படுத்தும் என்றும் புதின் எச்சரித்திருந்தார்.
மேலும், 1979-ம் ஆண்டு முதல் ரஷ்யாவும் ஈரானும் நெருங்கிய நட்பு நாடுகளாக இருந்து வருகின்றன.இருப்பினும், தற்போதைய போர் நெருக்கடியில் ரஷ்யாவிடமிருந்து நேரடியான உதவிகள் எதுவும் கிடைக்கவில்லை என ஈரான் வட்டாரங்கள் கவலை தெரிவித்துள்ளன.
அதே சமயம், இந்தப் போர்ச் சூழலால் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது அதிகரித்துள்ளது, அந்நாட்டிற்குப் பொருளாதார ரீதியாகச் சாதகமாக அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
English Summary
Russia Always Loyal Friend Iran Vladimir Putin Affirms Amidst War Tensions