சீறி பாய்ந்த 14 நொடிகளில் வெடித்து சிதறிய ராக்கெட் - நடந்தது என்ன?
rocket blast in austrelia
ஆஸ்திரேலியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமாக செயல்படும் கில்மர் நிறுவனம் குயின்ஸ்லாந்து மாகாணம் யாடலா நகரை மையமாக கொண்டது. தனியார் நிறுவனமான இந்த நிறுவனம் அரசின் நிதியுதவிகளையும் பெற்று வருகிறது.
இந்த நிலையில் கில்மர் நிறுவனம் நாட்டிலேயே முதல் முறையாக ராக்கெட் ஒன்றை தயாரித்து விண்ணில் செலுத்த முடிவு செய்தது. அதன்படி 'எரிஸ்' என்ற ராக்கெட்டை தயாரித்து, குறித்த நேரத்தின்படி கில்மர் நிறுவனத்துக்கு சொந்தமான ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.
கரும்புகையை கக்கியபடி விண்ணில் சீறிப்பாய்ந்த அந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்ட14 நொடிகளில் வானில் பறந்து கொண்டிருந்தபோதே வெடித்து சிதறியது. இது குறித்த விசாரணை நடத்தப்பட்டு மீண்டு வருவோம் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
English Summary
rocket blast in austrelia