கனடாவில் மாரடைப்பால் உயிரிழந்த இந்திய மாணவர்.!
punjab student died in canada for heart attack
கனடாவில் மாரடைப்பால் உயிரிழந்த இந்திய மாணவர்.!
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள, கானூர் மாவட்டம் ஷம்பு குர்த் பகுதியைச் சேர்ந்தவர் மன்ஜோத் சிங். பத்தொன்பது வயதுடைய இவர் மேற்படிப்பிற்காக கடந்த மாதம் 7-ம் தேதி கனடாவில் உள்ள சர்ரே நகருக்குச் சென்றிருந்தார்.
இந்த நிலையில் மன்ஜோத் முதல் நாள் வகுப்புக்காக கல்லூரிக்கு வந்துள்ளார். அங்கு கழிப்பறைக்கு வந்த அவர் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அவரது தந்தை கரம்ஜித் சிங் தெரிவித்தபோது, "கனடாவில் வசிக்கும் எங்கள் மருமகன் அமந்தீப் சிங்கிற்கு மன்ஜோத் மாரடைப்பால் உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். அவரது உடலை இந்தியாவிற்கு கொண்டு வர 18 முதல் 20 லட்சம் வரை செலவாகும்.
ஏற்கெனவே பல லட்ச ரூபாய் கடன் வாங்கித்தான் என் மகனை வெளிநாட்டிற்கு உயர்கல்வி படிக்க அனுப்பி வைத்தேன். இப்போது அவனது உடலைக் கொண்டுவர எங்களிடம் அவ்வளவு பணம் இல்லை.
ஆகவே, கனடாவில் இருந்து பஞ்சாப்பிற்கு எனது மகனின் உடலைக் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் மற்றும் சமூக சேவை அமைப்புகள் உதவிட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம், கானூர் மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
English Summary
punjab student died in canada for heart attack