இளவரசி டயானாவின் ஸ்வெட்டர் ஏலம்! இந்திய மதிப்பில் இத்தனை கோடியா? - Seithipunal
Seithipunal


இங்கிலாந்து அரசர் சார்லஸின் முதல் மனைவி டயானா. இவர் தனது 36 வயதில் கார் விபத்தில் உயிரிழந்து விட்டார். இந்நிலையில் சமீப காலமாக இளவரசி டயானா பயன்படுத்திய ஆடைகள், பொருட்கள் என அனைத்தையும் ஏலத்திற்கு விடுவது நடைபெற்று வருகிறது. 

அது போல் இளவரசி டயானா அணிந்த சிகப்பு நிற ஸ்வெட்டர் இங்கிலாந்து ஆடம்பர பின்னலாடை நிறுவனம் தயாரித்தது. இதனை கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏலம் விடப்பட்டது. 

இளவரசர் சார்லஸ் உடன் டயானா கோல்ப் ஒன்றுக்கு சென்ற போது இந்த ஸ்வெட்டரை அணிந்திருந்தார். இந்த ஸ்வெட்டரில் வரிசையாக வெள்ளை நிற ஆடுகள் படம் போட்டு ஒன்று மட்டும் கருப்பு நிறத்தில் இருக்கும். 

இதுகுறித்து அந்த சமயத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. தற்போது அந்த ஸ்வெட்டர் ஏலத்தில் ரூ .1.1 மில்லியன் அமெரிக்கா டாலருக்கும் இந்திய மதிப்பில் சுமார் ரூ. 9 கோடிக்கு ஏலம் போனது. 

இதற்கு முன்னதாக டயானா அணிந்திருந்த ஊதா நிற கவுன் ஒன்று ரூ. 4.9 கோடிக்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

princess Diana sweater auctioned


கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?Advertisement

கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?
Seithipunal
--> -->