ஜி20 மாநாடு: தென் ஆப்ரிக்கா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு..!
Prime Minister Modi receives rousing welcome as he arrives in South Africa for the G20 summit
ஜி20 மாநாட்டில் பங்கேற்க தென் ஆப்ரிக்கா சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆப்ரிக்க கண்டத்தில் முதல்முறையாக தென் ஆப்ரிக்காவில் நவம்பர் 21 முதல் 23 வரை நடைபெறவுள்ளது.
வளரும் நாடுகளில் தொடர்ச்சியாக நான்காவது முறையாக இம்மாநாடு நடத்தப்படுகிறது. முதலில் 2022-ஆம் ஆண்டுஇந்தோனேஷியாவிலும், 2023-ஆம் ஆண்டு இந்தியாவிலும், 2024-ஆம் ஆண்டு பிரேசிலிலும் இம்மாநாடு நடைபெற்றது.
இந்தாண்டு தென் ஆப்ரிக்காவில் நடக்கும் மாநாட்டில் பங்கேற்க இன்று (நவம்பர் 21) பிரதமர் மோடி விமானம் மூலம் கிளம்பினார். மாலை அவர் தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பெர்க் நகரம் சென்றடைந்தார். அங்கு அவருக்கு, கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த மாநாட்டில் இந்தியா மற்றும் உலகின் வளரும் நாடுகளின் பிரச்சினை குறித்து மோடி விவாதிக்கிறார்.
இந்த ஜி20 அமைப்பில் இடம் பெற்றுள்ள பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி தனித்தனியாகவும் சந்திப்பு நடத்தவுள்ளார்.
English Summary
Prime Minister Modi receives rousing welcome as he arrives in South Africa for the G20 summit