பிரேசில் வன்முறை: 'ஆழ்ந்த கவலை' தெரிவித்த பிரதமர் மோடி.! - Seithipunal
Seithipunal


பிரேசிலில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் போல்சனேரோ தோல்வியடைந்தார். இவருக்கு எதிராக போட்டியிட்ட முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று பிரேசிலின் அதிபராக லூயிஸ் பொறுப்பேற்றார்.

ஆனால் தோல்வியை ஏற்க மறுத்த போல்சனேரோ, தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து பாராளுமன்றத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். மேலும் அதிபர் மாளிகை, சுப்ரீம் கோர்ட்டு வளாகத்தில் அதிபருக்கு எதிராக கோஷங்களை எழுப்பி தாக்குதல் நடத்தினர்.

இந்நிலையில் பிரேசில் வன்முறை சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், பிரேசிலியாவில் உள்ள அரசு நிறுவனங்களுக்கு எதிரான கலவரம் மற்றும் நாசவேலைகள் பற்றிய செய்திகள் குறித்து ஆழ்ந்த கவலை அளிக்கிறது.

மேலும் ஜனநாயக மரபுகளை அனைவரும் மதிக்க வேண்டும் என்றும், பிரேசில் அதிகாரிகளுக்கு நாங்கள் முழு ஆதரவை வழங்குகிறோம் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM Modi Deeply Concerned About Brazil Riots


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->